Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விண்ணில் ஏவப்பட்டது PSLV C61 ராக்கெட்..! பயன்பாடுகள் என்ன தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 21, 2025
in அரசியல் செய்திகள்
0
விண்ணில் ஏவப்பட்டது PSLV C61 ராக்கெட்..! பயன்பாடுகள் என்ன தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேசிய பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, வானிலை பயன்பாடு, காடுகள் கண்காணிப்பு, விவசாயம், நகர திட்டமிடல் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக PSLV C61 ராக்கெட்டில் EOS-09 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் ISROவின் RISAT-1 பாரம்பரிய இன்ஜினை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வானிலை நிலைகளிலும் பல்வேறு பூமி கண்காணிப்பு பயன்பாடுகளுக்கான படங்களை வழங்கும் திறன் கொண்ட ஒரு செயற்கை துளை ரேடார் (SAR) பேலோடைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்த PSLV C61 இன்று காலை 5.59 மணிக்கு, ஸ்ரீஹரி கோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

புயல் போன்ற காலங்களில் வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்காணிக்க புகைப்பட ஆதாரங்களை இந்த செயற்கைக்கோள் அனுப்பவுள்ளது. மேலும் ராணுவ பயன்பாட்டின் எல்லைப் பாதுகாப்பில் இதுபோன்ற செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. தீவிரவாதிகளின் ஊடுருவலை அடையாளம் காணவும் இந்த செயற்கைக்கோள் உதவுகிறது.

சுமார் 1,696.24 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக்கோளை பூமியிலிருந்து 534 கிலோ மீட்டர் உயரே சென்று சூரிய வட்டப்பாதையில் நிலைநிறுத்திய பிறகு படிப்படியாக தூரம் குறைக்கப்பட்டு 351 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

PSLV-C61 ஏவுகணை, 17 நிமிட பயணத்திற்குப் பின், EOS-09 செயற்கைக்கோளை சூரிய வட்டப்பாதையில் (Sun Synchronous Polar Orbit – SSPO) நிலைநிறுத்தும். செயற்கைக்கோள் அதனுடைய பாதையில் பிரிக்கப்பட்ட பின், அதன் உயரத்தைக் குறைக்க, Orbit Change Thrusters (OCT) ஐப் பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

EOS-09 செயற்கைக்கோள் ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளின் பயனுள்ள சேவை முடிந்த பின், அதை கழிவுகளற்ற செயற்கைக்கோளாக மாற்ற, பூமிக்கு அருகே கொண்டுவந்து வான்வெளியிலேயே இரண்டாண்டுக்குள் அழிந்துவிடும் வகையில் தேவையான அளவு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.

பூமி பார்வை செயற்கைக்கோள்-09 (EOS-09) என்பது 2022ஆம் ஆண்டு ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்ட EOS-04 செயற்கைக்கோளின் அப்டேட் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்கள்!

Next Post

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி! நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி! நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம்!

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி! நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In