Last Updated:
சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி காயம், S5 பெட்டியில் 2ஆவது பெர்த் அறுந்து விழுந்ததால் ஏற்பட்டது.
சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் ரயிலில் கடந்த மாதம் படுக்கை சரிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெர்த் அறுந்து விழுந்து பயணி காயமடைந்தது தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், S5 பெட்டியில் 2ஆவது பெர்த் அறுந்து விழுந்து, கீழே அமர்ந்திருந்தவர் காயமடைந்துள்ளார் என்றும், அதற்கு பயணி கொக்கியை சரியாக மாட்டாததே காரணம் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்தவுடன் முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், ரயில் புறப்படுவதற்கு முன்பு, ரயில் பெட்டிகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பெர்த் சரியாக கொக்கி போடாமல் விடுவது, சக பயணிகளுக்கு பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிவுறுத்தலை பயணிகளுக்கு ரயில்வே வழங்கியுள்ளது.

