சினிமா பானியில் சவுண்ட் புரூப் அறைகள்
இதன் பின்னர் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி சின்னப் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டில் தான் பெண்களை அழைத்து வந்து பாலியல் துன்புறுத்தல் செய்வதும் வீடியோ எடுத்து மிரட்டி பணிய வைக்கும் செயல்களுக்குமான இடமாக மாறியது. திருநாவுக்கரசு பைனான்ஸ் செய்பவர் என்பதாலும் கிராமத்தில் வீடு இருப்பதாலும் பெரிதாக யாரும் சந்தேகப்பட வில்லை. வீட்டில் உள்ள அறைகளும் சத்தம் போட்டால் வெளியே கேட்காத படி இருக்க வசதியாக சினிமா பானியில் சவுண்ட் புரூப் செய்யப்பட்டிருந்தது என்று தெரிகிறது. வீட்டில் பயன் படுத்திய மற்றும் புதிய ஆணுறைகளும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த விசாரணையின் போக்கில் அருளானந்தம், ஹெரோன்பால், பைக் பாபு ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு 2021 பிப்ரவரி 22 ல் இரண்டாவது கூடுதல் குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
