Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இதுவரை வெளிவராத தகவல்… பயங்கரவாதி முகாம்கள் மீது இந்தியா தாக்கிய துல்லியமான நேரங்கள் வெளியாகின

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 8, 2025
in அரசியல் செய்திகள்
0
இதுவரை வெளிவராத தகவல்… பயங்கரவாதி முகாம்கள் மீது இந்தியா தாக்கிய துல்லியமான நேரங்கள் வெளியாகின
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 08, 2025 6:39 PM IST

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலாக இந்திய விமானப்படை 24 நிமிடங்களில் பாகிஸ்தானில் 9 தீவிரவாத முகாம்களை தாக்கியது. 1971 பிறகு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

News18News18
News18

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் நான்கு தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஐந்து தீவிரவாத தளங்கள் என மொத்தம் 9 தளங்களை வெறும் 24 நிமிடங்களில் இந்திய விமானப்படை தரைமட்டமாக்கியுள்ளது. இதில், முதலாவதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லியில் இருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முகாம் மீது அதிகாலை 1 மணி நான்கு நிமிடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. லஷ்கர் இ தொய்பாவின் பயிற்சித்தளமான இங்கு இதுவரை 50க்கும் மேற்பட்டோருக்கு தற்கொலைப் படை பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து 1.06 முதல் 1.10 மணிக்குள் பாகிஸ்தானின் முரித்கே (Muridke) நகரில் இருந்த லஷ்கர் இ தொய்பாவின் தலைமையகம் மற்றும் மிகப்பெரிய பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த முகாமை முற்றிலும் அழிக்கும் விதமாக அடுத்தடுத்து ஏவுகணைகளை கொண்டு தாக்கியதாக இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குட்பட்ட பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையகம் மீது 1.12 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு தான் தீவிரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

எல்லை தாண்டுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்த சியால்கோட் (Sialkot) முகாமில் 1.15 மணிக்கும், ஆயுதங்கள் சேமிப்பு மற்றும் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முஷாபராபாத் நகரில் 1.17 மணிக்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சித் தளமாக செயல்பட்டு வந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிம்பாரில் உள்ள முகாம் மீது 1.19 மணிக்கும், பாகிஸ்தானின் சக் அம்ருவில் 1.22 மணிக்கும், குல்பூர் 1.25 மணிக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முரித்கே (Muridke) நகரில் இருந்த லஷ்கர் இ தொய்பாவின் 2 ஆவது முகாம் மீது சரியாக அதிகாலை 1.28 மணிக்கு கடைசி தாக்குதலை நிகழ்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குட்பட்ட பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

இதுவரை வெளிவராத தகவல்… பயங்கரவாதி முகாம்கள் மீது இந்தியா தாக்கிய துல்லியமான நேரங்கள் வெளியாகின



.

Previous Post

பாகிஸ்தான் திரைப்படங்கள், வெப்சீரிஸை ஸ்ட்ரீமிங் செய்ய தடை.. ஓடிடி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Next Post

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In