Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகளை 4 முறை நெருங்கிய ராணுவம்… பிடிப்பதில் இருக்கும் சிக்கல் என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 5, 2025
in அரசியல் செய்திகள்
0
பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகளை 4 முறை நெருங்கிய ராணுவம்… பிடிப்பதில் இருக்கும் சிக்கல் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 28, 2025 4:29 PM IST

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் நான்கு முறை நெருங்கியுள்ளனர். அடர்ந்த காடுகள் காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. 22-ஆம் தேதி 26 பேர் கொல்லப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதல்பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல்

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இதுவரை நான்கு முறை நெருங்கியிருப்பதும், அடர்ந்த காடுகள் என்பதால் தீவிரவாதிகளைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு பேர் உட்பட 4 தீவிரவாதிகள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ராணுவம், துணை ராணுவப் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை நான்கு முறை நெருங்கியதும், அடர்ந்த காடுகளைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பியோடியிருப்பதும் தெரியவந்துள்ளது.

முதலில் பஹல்காம் தாலுகாவிற்குட்பட்ட ஹபட் நார் கிராமம் அருகே வனப்பகுதியில் பதுங்கியிருந்த நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். ஆனால், அடர்ந்த காடுகளைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பியோடியுள்ளனர். அடுத்ததாக குல்காம் அருகே வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பிடிக்க முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். அதன்பின் கொகேர்நாக் உட்பட இரண்டு பகுதிகளில் அடர் காடுகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததையும், இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உணவை எடுத்துக் கொண்டு ஓடியதையும் பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.

பஹல்காமின் உயரமான பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கிஷ்த்வார் மலைத்தொடரில், தற்போது பனிப்பொழிவு குறைவாகவே உள்ளதால் தீவிரவாதிகள் இந்த மலைத்தொடரைப் பயன்படுத்தி இடம்பெயர்ந்து வருவதாகவும், தற்போது அவர்கள் தெற்கு காஷ்மீரில் இருக்கலாம் என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பைசரன் புல்வெளியில் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட இருவரின் செல்போன்களை தீவிரவாதிகள் எடுத்துச் சென்றுள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி யாருடனாவது தொடர்பு கொள்கிறார்களா என்று ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்றிரவு நான்காவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. குப்வாரா மற்றும் பூஞ்ச் பகுதிகளில் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First Published :

April 28, 2025 4:29 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகளை 4 முறை நெருங்கிய ராணுவம்… பிடிப்பதில் இருக்கும் சிக்கல் என்ன?



.

Previous Post

பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு!

Next Post

பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In