Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாம்பு விழுந்த உணவை சாப்பிட மாணவர்களை வற்புறுத்திய அரசு பள்ளி ஊழியர்கள்… மனித உரிமை ஆணையம் நடவடிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 5, 2025
in அரசியல் செய்திகள்
0
பாம்பு விழுந்த உணவை சாப்பிட மாணவர்களை வற்புறுத்திய அரசு பள்ளி ஊழியர்கள்… மனித உரிமை ஆணையம் நடவடிக்கை!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 04, 2025 1:30 PM IST

அன்றைய தினத்தில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த மதிய உணவை சாப்பிட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட பிறகு குழந்தைகளின் உடல்நலம் மோசமானதை அடுத்து 24-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

News18News18
News18

பாட்னாவில் உள்ள மொகாமா பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த பாம்பு கண்டறியப்பட்ட சூழ்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் இது சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று மீடியாவில் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த இந்த சம்பவத்தில், உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை உண்மை என கண்டறியப்பட்டால் மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டதன் காரணத்திற்காக மோசமான விளைவுகளை சம்பந்தப்பட்ட நபர்கள் சந்திக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. மேலும் 2 வாரத்திற்குள் அங்கு நடந்த சம்பவம் குறித்த விளக்கமான அறிக்கையை வழங்கும் படி மனித உரிமை ஆணையம் பீஹார் மாநிலத்தின் சீஃப் செக்ரெட்டரி ஆஃப் கவர்மெண்ட் மற்றும் சூப்பரிண்டன்ட் ஆஃப் போலீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. மேலும் அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன என்பது பற்றியும் அதில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அன்றைய தினத்தில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த மதிய உணவை சாப்பிட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட பிறகு குழந்தைகளின் உடல்நலம் மோசமானதை அடுத்து 24-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் நடந்ததை எதிர்க்கும் விதமாக உள்ளூர் மக்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாம்பு இருந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

எனினும் குழந்தைகளின் செரிமான அமைப்பில் எந்த விதமான நச்சுப் பொருளும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். எனவே இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடக்கும் என்று SDM சுபம் குமார் உறுதி அளித்துள்ளார். மொகாமா பிளாக்கில் உள்ள மேக்ரா கிராமத்தை சேர்ந்த உப்கிராமித் மத்திய வித்யாலயா அரசு பள்ளியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்ட உடனேயே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அங்குள்ள கிராமவாசிகள் கூறுகின்றனர்.

இந்த குழந்தைகளுக்கு மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படவே கிராமம் முழுவதும் ஒருவித பதட்டமான சூழ்நிலை நிலவி உள்ளது. குழந்தைகள் சாப்பிட்ட உணவில் பாம்பு இருந்ததாகவும், பாம்பை எடுத்துவிட்டு குழந்தைகளை சாப்பிட சொல்லி ஊழியர்கள் அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு சில குழந்தைகள் கெட்டுப்போன உணவை சாப்பிட மறுத்தபோது அவர்களை கட்டாயப்படுத்தியதாகவும் கிராமவாசிகள் கூறுகின்றனர். மேலும் கெட்டுப் போன உணவை வழங்கிய பிறகு அங்குள்ள ஆசிரியர்கள் பள்ளியை பூட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

பாம்பு விழுந்த உணவை சாப்பிட மாணவர்களை வற்புறுத்திய அரசு பள்ளி ஊழியர்கள்… மனித உரிமை ஆணையம் நடவடிக்கை!



.

Previous Post

இந்தியா – பாக்., போர் பதற்றம் : எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்!

Next Post

பஹல்கம் தாக்குதலில் தப்பிய குடும்பம்: நேரடி காட்சிகளை விவரித்த அதிகாரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பஹல்கம் தாக்குதலில் தப்பிய குடும்பம்: நேரடி காட்சிகளை விவரித்த அதிகாரி

பஹல்கம் தாக்குதலில் தப்பிய குடும்பம்: நேரடி காட்சிகளை விவரித்த அதிகாரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In