இந்த நிலையில் Indus ஆற்றில் தண்ணீர் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கையெழுத்திட இருந்தது. எனினும் இந்தியா இதனை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று இஸ்லாமாபாத் கூறி வருகிறது. இது சம்பந்தமாக விசாரணை நடக்க வேண்டும் என்று கூறி இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உள்ள முதன்மையான எல்லைப் பகுதியான வாகா-அட்டாரி பார்டரை இரண்டு நாடுகளும் மூடியுள்ளது.
அதிகாரப்பூர்வமாக இரு நாடுகளுக்கு இடையே குறைந்தபட்ச வர்த்தகம் நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், நிபுணர்களின் கருத்துக்களின் படி, தொடர்ந்து மறைமுகமாக பில்லியன் கணக்கான டாலர்கள் சம்பந்தப்பட்ட வர்த்தகம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே வியாபாரத்தை நிறுத்தியது மற்றும் எல்லையை மூடியதன் காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் உண்மையில் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வி எழுகிறது.
1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது. இதன் பிறகில் இருந்தே இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழக்கமான வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 1996 ஆம் ஆண்டு நியூ டெல்லி இஸ்லாமாபாதை மோஸ்ட் ஃபேவர்டு நேஷன் (Most Favoured Nation – MFN) என்ற அந்தஸ்தை அளித்தது. இதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் இன்னும் அதிகரித்தது.
2017 – 2018 நிதியாண்டில் மட்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் 2.41 பில்லியன் டாலராக இருந்தது. இதுவே 2016 – 2017 ஆம் ஆண்டு 2.27 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் 2019 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கிய MFN அந்தஸ்தை மீண்டும் பெற்றுக் கொண்டது. இதற்கு முக்கிய காரணம் பல்வாமாவில் நடந்த சூசைட் பாம் தாக்குதல். இதில் 40 இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக 2018 முதல் 2024 வரை 2.41 பில்லியன் டாலராக இருந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் என்பது 1.2 பில்லியன் டாலராக குறைந்தது.
ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை இந்தியா பாகிஸ்தானுக்கு 447.7 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு 420,000 டாலர் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்தியா பாகிஸ்தானுக்கு மருந்துகள், பெட்ரோல், பிளாஸ்டிக், ரப்பர், ஆர்கானிக் கெமிக்கல்கள், சாயங்கள், காய்கறிகள், மசாலா பொருட்கள், காபி, டீ, டைரி ப்ராடக்டுகள் மற்றும் தானியங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறது. அதே சமயத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு காப்பர், கண்ணாடி பொருட்கள், ஆர்கானிக் கெமிக்கல்கள், சல்பர், பழங்கள், நட்ஸ் மற்றும் ஒரு சில எண்ணெய் விதைகள் போன்றவை இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுடைய அதிகாரப்பூர்வமற்ற வர்த்தகம் எப்படி செயல்படுகிறது?
அதாவது இந்திய பொருட்கள் துபாய், சிங்கப்பூர் மற்றும் கொலம்போவுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அந்த பொருட்கள் கிடங்குகளில் சேமிக்கப்பட்டு, அவற்றின் டாக்குமென்ட்கள் மற்றும் லேபிள்கள் மாற்றப்படுகிறது. இந்த ப்ராடக்டுகள் மீண்டும் அங்கிருந்து வேறு ஒரு நாட்டு பொருள் போல பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதே மாதிரியான வர்த்தகத்தில் பல வருடங்களாக சீனா இந்தியாவுடன் ஈடுபட்டுள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவிற்கு நேரடியாக பொருட்கள் வரும் பட்சத்தில் அதற்கு அதிக வரி செலுத்த வேண்டி இருக்கும். இதன் காரணமாக சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், லாவோஸ், ப்ரூனி போன்ற நாடுகள் வழியாக இந்தியாவிற்கு சீன பொருட்கள் கொண்டு வரப்படுகிறது.
இதுவரை பாகிஸ்தான் இந்தியாவிற்கு ஒரு நாளும் MFN அந்தஸ்தை வழங்கியதே கிடையாது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவுடனான பரஸ்பர உறவை தரம் தாழ்த்துவதற்கான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன்பிறகிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
இந்தியா – பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமற்ற வர்த்தகம் எப்படி செயல்படுகிறது? தகவல்கள் தெரிவிப்பதென்ன?
