சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று(ஏப். 15) ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின்(22 கேரட்) விலை ரூ.280 குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு பவுன் தங்கம் ரூ.69,760-க்கு விற்பனையாகிறது.
22 கேரட் தங்கம் திங்கள்கிழமை ஒரு பவுனுக்கு ரூ. 120 குறைந்து, ரூ. 70,040-க்கு விற்பனையான நிலையில், இன்று அதிரடியாக ஒரு பவுனுக்கு ரூ.280 விலை குறைந்துள்ளது.
வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 2 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 108-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

