தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்தார். அவரது பெயரை, மூத்த தலைவர்கள் முன்மொழிந்தனர்.
பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை தாக்கல் செய்த நிலையில், அவருடன், பாஜகவின் மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
அதுபோல, நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவை, அண்ணாமலை, எல். முருகன், வானதி ஸ்ரீனிவாசன் உள்பட 10 தலைவர்கள் முன்மொழிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுபோல, மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்வார் என்றும் அவர் ஒருமனதாக பாஜக மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு நாளை பதவியேற்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

