நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தியபடி தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்குமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ 328 கோடி, ரூ 2151 கோடி, ரூ 1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.
இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித் துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையுடன் இந்தத் தொகைகளை அளிப்பதைப் பிணைக்கக் கூடாது என்றும் நிலைக்குழுஅறிவுறுத்தியிருக்கிறது.
இந்த அறிவுரையை ஏற்று பணங்களை மத்திய அரசு அளிக்கப்போகிறதா அல்லது நிலைக்குழுவின் அறிவுரையைப் புறக்கணிக்கப் போகிறதா என்று பார்க்கலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
