பசுமை தொழில்நுட்பங்கள், ஸ்மார்ட் உள்கட்டமைப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி துறைகளில் பிரிட்டிஷ் தொழில்கள் மாநிலத்திற்கு உதவ முடியும் என்று மம்தா பானர்ஜி கூறினார். “ஆட்டோமேஷன், பொறியியல் மற்றும் பசுமை உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் மேலும் பார்ட்னர்ஷிப்பை நாங்கள் வரவேற்கிறோம்” என்று அவர் நிகழ்வில் கூறினார், இதன் வீடியோ மம்தா பானர்ஜியின் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது.

