இந்த வயதான பெண்மணி தன் சூழ்நிலை காரணமாக ஒரு ஹோட்டலில் கழிப்பறையை வெறும் 6 நிமிடங்கள் பயன்படுத்தியதற்காக ஊழியர்கள் ரூ.805 கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகள் LinkedIn பதிவில் குறிப்பிட்ட நிலையில், அந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கது ஷ்யாம் கோவிலில் தன் கணவர், மகள்களுடன் வழிபாட்டு செய்ய வந்தவர்கள் தரிசன வரிசையில் காத்திருந்துள்ளனர். அப்போது வயதான பெண்மணிக்குக் கடுமையான குமட்டலால் உணர்வு ஏற்பட்டுள்ளது. அவர் நிற்க முடியாமல் சிரமப்பட்டதால், அவரது குடும்பத்தினர் அருகில் கழிப்பறையைத் தேடினர்.
இதையும் படிங்க: அட்சய திருதியை பலனை பெற வீட்டில் இதை செய்யுங்க… ஜோதிட சாஸ்திரம் கூறும் தகவல்…
ஆனால் அருகில் எதுவும் கிடைக்கவில்லை. அங்கிருந்த பொதுக் குளியல் பகுதிகள் அவர்களது தேவைகளுக்குப் பொருத்தமற்றதாக இருந்ததால், அருகிலுள்ள ஒரு ஹோட்டலை அணுகியுள்ளனர். பெண்மணியின் நிலை அறிந்தும், ஹோட்டல் வரவேற்பாளர் இரக்கம் காட்டுவதற்குப் பதிலாக, ஒரு சில நிமிடம் கழிப்பறை பயன்படுத்துவதற்கே ரூ.800க்கு மேல் கட்டணம் கேட்டுள்ளார். வேறு வழியில்லாமல், அவசரநிலையை எதிர்கொண்டு குடும்பத்தினர் அதிகப்படியான கட்டணத்தை ஏற்றுக்கொண்டனர்.
“நாங்கள் காத்திருந்தபோது, என் அம்மாவுக்கு திடீரென்று உடல்நிலை மிகவும் மோசமாகத் தொடங்கியது. குமட்டல், வயிற்று வலி மற்றும் வாந்தி எடுக்க வேண்டும் என்ற வலுவான உந்துதல். அப்பா கழிப்பறைக்காகச் சுற்றிப் பார்த்தார், நாங்கள் அம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்தபோது. ஆனால் பயன்படுத்தக்கூடிய எதுவும் இல்லை.
சுமார் 1 கி.மீ. தொலைவில் கோவில் பகுதிக்கு அருகில் கழிப்பறை இல்லை. சில பொது குளியல் பகுதிகள் உள்ளன, ஆனால் சரியான கழிப்பறைகள் இல்லை. அவரால் நிற்கக்கூட முடியவில்லை. நாங்கள் அருகிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு விரைந்து சென்று வரவேற்பறையில் இருந்த நபரிடம் கெஞ்சினோம். எங்களுக்கு அறை தேவையில்லை, கழிப்பறை மட்டும், 5-10 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: Akshaya Tritiya 2025: செல்வச் செழிப்பை அள்ளித் தரும் அட்சய திருதியை… தங்கம் வாங்க முடியலைன்னா என்ன இந்த பொருட்களை வாங்குங்க…
அவர் என் அம்மாவின் நிலையைப் பார்த்து… கழிப்பறையைப் பயன்படுத்த ரூ.800 கட்டணம் என்றார். நாங்கள் அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவர் அவதியில் இருக்கும் பெண்ணுக்கு எந்த அனுதாபமும் காட்டவில்லை. எந்த தயக்கமும் இன்றி கட்டணம் வசூலிப்பதில் முனைப்புடன் இருந்தார்.
நான் இன்னும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்… ஒரு பெண் வலியில் இருப்பதைப் பார்த்துவிட்டு, அடிப்படை மனிதநேயத்திற்கு எப்படி விலை கொடுக்க முடியும்? நாம் என்ன ஆகிவிட்டோம்?” என LinkedIn பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது. சூழ்நிலை காரணமாகக் கட்டணம் செலுத்தி விட்டு, அவரது கணவர் பில் கேட்டபோது, வரவேற்பாளர் ஒரு சட்டவிரோத நடைமுறையை மேற்கொண்டார், இதனால் ஹோட்டல் ஊழியர் குடும்பத்தினரைக் கடிந்து கொண்டுள்ளார். பின்னர் குடும்பத்தினால் பில் வாங்குவதில் விடாப்பிடியாக இருந்த நிலையில் வேறு வழியின்றி கையால் ரசீது எழுதிக் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: குஜராத்திலிருந்து தூத்துக்குடி வரும் உப்பு… உப்பளத் தொழிலைக் காக்க அரசுக்கு கோரிக்கை…
ராஜஸ்தானில் உள்ள காது ஷ்யாம் போன்ற பிரசித்தி பெற்ற கோவிலுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். ஆனால் ஒரு பெண்மணி அவசரத்தில் தவிக்கும் போது கழிப்பறை பயன்படுத்த ரூ.805 கட்டணம் வசூலித்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 28, 2025 7:13 PM IST
