Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பல ஆண்டுகளாக இருளில் தவித்த 8 குடும்பங்கள்.. இறுதியாக கிடைத்த மின்சாரம்.. நடனமாடி மகிழ்ந்த பழங்குடியினர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2025
in அரசியல் செய்திகள்
0
பல ஆண்டுகளாக இருளில் தவித்த 8 குடும்பங்கள்.. இறுதியாக கிடைத்த மின்சாரம்.. நடனமாடி மகிழ்ந்த பழங்குடியினர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 14, 2025 7:58 AM IST

அடிப்படை உள்கட்டமைப்பிற்காக பல போராட்டங்கள் மற்றும் முறையீடுகள் செய்தனர். கடந்த 2022-ல் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மற்றும் அனகப்பள்ளி ஆட்சியர் வருகையின் போதும் இதுகுறித்து கோரிக்கைகளை கிராம மக்கள் வைத்தனர்.

News18News18
News18

தெலங்கானாவின் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஜீலுகுலோவா பழங்குடியினர் சமூகத்தினர், தங்கள் கிராமத்திற்கு முதன்முறையாக மின்சாரம் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் பாரம்பரிய திம்சா நடனமாடி மகிழ்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமலம்மா மலையின் உச்சியில் அமைந்துள்ள ஜீலுகுலோவாவில் எட்டு குடும்பங்கள் மட்டுமேANDR வசித்து வருகின்றனர். இந்த 8 குடும்பங்களில் மொத்தமாக 50 பேர் உள்ளனர். அந்த கிராமத்தில் இதுவரை, மின்சாரம் என்பதே கிடையாது. இதனால், இந்த மக்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அடர்ந்த காடுகள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு மத்தியில் இருளில் வாழ்ந்து வந்துள்ளனர். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இங்குள்ள கிராம மக்கள் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தி சாப்பிடுவது உள்ளிட்ட பணிகளையும், தங்கள் தொலைபேசிகளை சார்ஜ் செய்ய பங்காரு பந்தலுவுக்கு 7 கி.மீ தூரம் நடந்தே சென்று வந்துள்ளனர். யாராவது நோய்வாய்ப்பட்டாலோ அல்லது பாம்பு கடித்தாலோ மருத்துவமனைக்குச் செல்லக் கூட சிரமங்களைச் சந்தித்து வந்துள்ளனர்.

அடிப்படை உள்கட்டமைப்பிற்காக பல போராட்டங்கள் மற்றும் முறையீடுகள் செய்தனர். கடந்த 2022-ல் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மற்றும் அனகப்பள்ளி ஆட்சியர் வருகையின் போதும் இதுகுறித்து கோரிக்கைகளை கிராம மக்கள் வைத்தனர். இதனையடுத்து அவர்களின் நீண்ட காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்தது. அனகப்பள்ளி ஆட்சியர், மின்சாரம், தண்ணீர் மற்றும் சாலைகள் வழங்குவதாக கிராம மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், இதற்கான பணிகள் ஆமை வேகத்திலேயே நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜன்மன் திட்டத்தின் கீழ், ஜீலுகுலோவா கிராமத்திற்கு மின்சாரம் வந்தடைந்தது. இதனால் மின் விளக்குகள் எரியத் தொடங்கியது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதையடுத்து அங்குள்ள கிராம மக்கள் மகிழ்ச்சியை நடனமாடி கொண்டாடினர். பாரம்பரிய திம்சா நடனமாடி மகிழ்ந்த கிராமத்தினரின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தங்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்த அனகப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்சாரத் துறை பொறியாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இதுகுறித்துப் பேசிய கிராம மக்கள் மின்சாரம் கிராமத்திற்கு வந்தடைந்தது ஒரு பெரிய வெற்றி என்று கூறினர். ஆனால், இன்னும் சாலை மற்றும் குடிநீர் வசதிக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக வருத்தத்துடன் கூறினர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 14, 2025 7:58 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பல ஆண்டுகளாக இருளில் தவித்த 8 குடும்பங்கள்.. இறுதியாக கிடைத்த மின்சாரம்.. நடனமாடி மகிழ்ந்த பழங்குடியினர்!



.

Previous Post

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்

Next Post

ஒரு நாள்தான்… அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள்: விமானப் பணிப்பெண் தாய் | plane crash | gujarat

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரு நாள்தான்… அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள்: விமானப் பணிப்பெண் தாய் | plane crash | gujarat

ஒரு நாள்தான்... அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள்: விமானப் பணிப்பெண் தாய் | plane crash | gujarat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In