காவல்துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம், தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டு 5-வது காவல் ஆணையம் அமைத்தது. சென்னை அசோக்நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இந்த காவல் ஆணையம் இயங்கி வருகிறது. காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
கருத்துகளை தபால் மூலம் தெரிவிக்க விரும்புபவர்கள், ‘தலைவர், 5-வது காவல் ஆணையம், காவல் பயிற்சி கல்லூரி வளாகம், அசோக் நகர், சென்னை-93’ என்ற முகவரிக்கும், மின்னஞ்சலில் அனுப்ப விரும்புவோர், fifthpolicecommision@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் கருத்துகளை அனுப்பலாம்.
நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புவர்கள், வருகிற டிசம்பர் 5-ந் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மேற்கண்ட முகவரிக்கு நேரடியாக சென்று கருத்துகளை சமர்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 9791987112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த காவல் ஆணையத்தால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை அப்படி இருக்கும்போது பொதுமக்கள் கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் அதை தொடர்பு கொள்வது வீணானது