Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பள்ளி தண்ணீர் தொட்டியில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்த 5ம் வகுப்பு மாணவன்…! இறுதியில் நடந்தது என்ன…? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 10, 2025
in அரசியல் செய்திகள்
0
பள்ளி தண்ணீர் தொட்டியில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்த 5ம் வகுப்பு மாணவன்…! இறுதியில் நடந்தது என்ன…? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:August 09, 2025 6:22 PM IST

கர்நாடகாவில் உள்ள பள்ளி ஊழியர்கள் மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிக்கும்போது, தண்ணீரில் துர்நாற்றம் மற்றும் அசாதாரண நிறம் இருப்பதை கவனித்தபோது, தண்ணீரில் மாசுபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

News18News18
News18

கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் 5ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சம்பவம் ஹோசநகர தாலுகாவில் உள்ள ஹூவினகோன் கிராமத்தில் நடந்தது. காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த மாணவர் தனது வீட்டிலிருந்து இஞ்சி பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தைக் கொண்டுவந்து பள்ளியின் குடிநீர் தொட்டியில் ரகசியமாக ஊற்றியுள்ளார். அவரது இந்த செயலைக் கண்ட இரண்டு வகுப்பு தோழர்களை, அந்த மாணவன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பள்ளி ஊழியர்கள் மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிக்கும்போது, தண்ணீரில் துர்நாற்றம் மற்றும் அசாதாரண நிறம் இருப்பதை கவனித்தபோது, தண்ணீரில் மாசுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், உடனடியாக தண்ணீரைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, எந்த மாணவரும் அதை குடிக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இதனால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், பள்ளி நிர்வாகம் ஹோசநகர் போலீசில் புகார் அளித்தனர், அதைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். தொட்டியில் கலக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து இஞ்சி பயிர்களைப் பாதுகாக்க பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சில மாணவர்கள், தொட்டியின் அருகே 11 வயது வகுப்புத் தோழனைக் கண்டதாகக் கூறினர். விசாரணையில், அந்த மாணவர் பூச்சிக்கொல்லியை கலந்ததை ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க: பாலியல் உறவுக்கான வயது வரம்பை 16 ஆக குறைப்பு? – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கொடுத்த பதில்

அந்த மாணவன் சமீபத்தில் கிளாஸ் லீடராக நியமிக்கப்பட்டான் என்பது தெரியவந்தது. ஆனால், அவனது வகுப்பு தோழர்கள் அவனது அறிவுறுத்தல்களைப் பின்பற்றாததால், அவன் கோபமடைந்தான். அவர் தனது வீட்டிலிருந்து ஒரு பூச்சிக்கொல்லி பாட்டிலைக் கொண்டுவந்து காலையில் பள்ளி தொடங்குவதற்கு முன்பு தொட்டியில் கலந்துவிட்டான். அந்த மாணவர் வேறொருவரின் அறிவுறுத்தலின்கீழ் செயல்படுகிறாரா என்றும் போலீசார் விசாரித்தனர். ஆனால், இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. தற்போது அந்த மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வந்தே பாரத் ரயில்களில் அறிமுகமாகும் புதிய அம்சம்…! 15 நிமிடங்களுக்கு முன்பு கூட டிக்கெட் புக்கிங் செய்யலாம்…

இந்த சம்பவத்தை அறிந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, பள்ளி தொட்டியில் பூச்சிக்கொல்லிகளைக் கலப்பது குழந்தைகளை பெருமளவில் கொல்லும் நோக்கம் கொண்ட செயல் என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் இது ஒரு பயங்கரவாத செயலை தவிர வேறில்லை. முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டார். சரியான நேரத்தில் பள்ளியின் சமையலறை ஊழியர்களின் விழிப்புணர்வு காரணமாக, ஏற்படக்கூடிய ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்றும், பள்ளியின் சமையலறை ஊழியர்களை நான் வாழ்த்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 09, 2025 6:22 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பள்ளி தண்ணீர் தொட்டியில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்த 5ம் வகுப்பு மாணவன்…! இறுதியில் நடந்தது என்ன…?



.

Previous Post

'பக்கம் எண் 44, வாக்குறுதி எண் 285' – திமுகவின் வாக்குறுதியும் பொய் பேசிய சேகர் பாபுவும்?

Next Post

கமல் ஹாசன்: “தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்” – முதலமைச்சரை பாராட்டிய கமல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கமல் ஹாசன்: “தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்” – முதலமைச்சரை பாராட்டிய கமல்!

கமல் ஹாசன்: "தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்" - முதலமைச்சரை பாராட்டிய கமல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In