Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

50 மாணவியரிடம் பாலியல் சீண்டல்: பள்ளி முதல்வருக்கு ‘வலை’

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 5, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
50 மாணவியரிடம் பாலியல் சீண்டல்: பள்ளி முதல்வருக்கு ‘வலை’
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சண்டிகர்: ஹரியானாவில், அரசு பள்ளியில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட மாணவியரிடம், பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானாவின், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட மாணவியர், பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, மாநில மகளிர் கமிஷனிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யும்படி, போலீசாருக்கு மாநில மகளிர் கமிஷன் அறிவுறுத்தியது.

இதற்கிடையே, பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளி முதல்வரை, மாவட்ட கல்வி நிர்வாகம் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து, பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக, ஹரியானா மகளிர் கமிஷன் தலைவர் ரேணு பாட்டியா கூறியதாவது:

பள்ளி முதல்வர் குறித்து மாணவியரிடம் இருந்து, 60க்கும் மேற்பட்ட எழுத்துப்பூர்வமான புகார்கள் வந்துள்ளன. மாணவியரை தன் அலுவலகத்திற்கு வரவழைத்து, பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக, மாணவியரிடம் இருந்து, செப்., 13ல் புகார் வந்தது. அடுத்த நாளே நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு பரிந்துரை செய்தோம். ஆனால், அக்., 29 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, மாணவியர் மீண்டும் எங்களை தொடர்பு கொண்டனர். பின், ஜிந்த் மாவட்ட எஸ்.பி.,யுடன் நாங்கள் பேசியதை அடுத்து, இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, தலைமறைவான, 55 வயதாகும் பள்ளி முதல்வரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Previous Post

சிறுவனின் நுரையீரலில் ஊசி:அறுவை சிகிச்சையின்றி காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்தவா்கள்

Next Post

தோ்தல் நிதிப் பத்திரங்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு அனுமதி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தோ்தல் நிதிப் பத்திரங்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு அனுமதி..!

தோ்தல் நிதிப் பத்திரங்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு அனுமதி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In