Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தெலங்கானா:119 இடங்களுக்கு 4,798 பேர் வேட்பு மனு தாக்கல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தெலங்கானா:119 இடங்களுக்கு 4,798 பேர் வேட்பு மனு தாக்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹைதராபாத்: விரைவில் நடைபெற உள்ள தெலங்கானா சட்டசபை தேர்தலில் 119 இடங்களுக்கு பல்வேறு கட்சியினர் சார்பில் 4,798 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3 -ம் தேதி துவங்கியது. கடைசி தேதி 10 ம் தேதி ஆகும். நாளை (13-ம் தேதி)வேட்பு மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 15-ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி ஆகும்.

மொத்தம் உள்ள 119 இடங்களிலும் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதன் கூட்டாளியான ஓவைசியின் கட்சியும் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் 118 இடங்களில் போட்டியிடுகிறது. ஒரு இடம் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சி.பி.ஐ.,க்கு ஒதுக்கி உள்ளது.

பா.ஜ., சார்பில் 111 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. என்.டி.ஏ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவுக்கு 8 இடங்கள் ஒதுக்கி உள்ளது.

மேலும்119 தொகுதிகளில் போட்டியிடும் 4,798 வேட்பாளர்கள் 5,716 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கஜ்வெல் தொகுதியில் 145 வேட்பாளர்கள் 154 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இத்தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ. தலைவர் எட்டால ராஜேந்தர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேட்சல் தொகுதியில் 116 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். சித்திபேட்டையில் மாநில நிதி அமைச்சரான ஹரீஷ் ராவ் உட்பட 62 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சிர்சில்லா தொகுதியில் 36 பேரும், குறைந்தபட்சமாக நாராயணப்பேட்டை தொகுதியில் 13 வேட்பாளர்கள் 19 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த அக்.,மாதம் 9-ம் தேதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகளும் பின்பற்றப்பட்டன. இதனையடுத்து நவ.,11 ம் தேதி வரையில் ரூ.544 கோடி வரையில் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் 186.8 கோடிரூபாய் ரொக்கம், 292 கிலோ தங்கம், 1,172 கிலோ வெள்ளி, 77.8 கோடி ரூபாய் மதிப்புள்ள மது பானங்கள் , 31.9 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைபொருட்கள் மற்றும் 178 கோடி ரூபாய் மதிப்புள்ள இதரமதிப்பு மிக்க பொருட்கள் உள்ளிட்வை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வரும் 30 ம் தேதி ஓட்டு பதிவும் டிச., 3-ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்



.

Previous Post

உடுப்பியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்திக் கொலை

Next Post

ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி: பிரதமர் மோடி பேச்சு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி: பிரதமர் மோடி பேச்சு

ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி: பிரதமர் மோடி பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In