மத்திய அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் நிதியில் குறிப்பிட்ட பகுதியை மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகிறது. நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையினை மாநிலங்களுக்கான நிதி பகிர்வு என்று அழைக்கிறார்கள்.
இந்த நிதியை தனது வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு செலவினங்களுக்குப் பயன்படுத்தலாம். இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 10 ஆம் தேதி வழங்கப்படவிருந்த நிதியை 10 நாட்களுக்கு முன்னதாகவே இன்று மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதன் அடிப்படையில் ரூ. 4,144 கோடி தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக பின்வரும் தொகை விடுவிக்கப்பட்டுள்ளன.
ஆந்திரா – ரூ. 4112 கோடி
அருணாசல பிரதேசம் – ரூ. 1785 கோடி
அசாம் – ரூ. 3178 கோடி
பீகார் – ரூ. 10219 கோடி
சட்டீஸ்கர் – ரூ. 3462 கோடி
கோவா – ரூ. 392 கோடி
குஜராத் – ரூ. 3534 கோடி
ஹரியானா – ரூ. 11111 கோடி
இமாசல பிரதேசம் – ரூ. 843 கோடி
ஜார்க்கண்ட் – ரூ. 3360 கோடி
கர்நாடகா – ரூ. 3705 கோடி
கேரளா – ரூ. 1956 கோடி
மத்திய பிரதேசம் – ரூ. 7976 கோடி
மகாராஷ்டிரா – ரூ. 6418 கோடி
மணிப்பூர் ரூ. 727 கோடி
மேகாலயா – ரூ. 779 கோடி
மிசோரம் – ரூ. 508 கோடி
நாகலாந்து – ரூ. 578 கோடி
ஒடிசா – ரூ. 4601 கோடி
பஞ்சாப் – ரூ. 1836 கோடி
ராஜஸ்தான் – ரூ. 6123 கோடி
சிக்கிம் – ரூ. 394 கோடி
தமிழ்நாடு – ரூ. 4144 கோடி
தெலங்கானா – ரூ. 2136 கோடி
திரிபுரா – ரூ. 719 கோடி
உத்தரப்பிரதேசம் – ரூ. 18,227 கோடி
உத்தரகாண்ட் – ரூ. 1136 கோடி
மேற்கு வங்கம் – ரூ. 7644 கோடி
October 01, 2025 9:26 PM IST
தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி விடுவித்த மத்திய அரசு.. மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதி விபரங்கள் என்ன?
