புதுடில்லி: 4 மாநிலங்களில் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பின்னடைவை சந்தித்த தலைவர்களின் விபரம்:
* தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இரண்டு தொகுதியில் போட்டியிட்ட நிலையில், கம்மா ரெட்டி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
* சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் தீபக் பயிஜ், சபாநாயகர் சரத் தாஸ் மகந்த், அமைச்சர்கள் முகமது அக்பர், சிவகுமார் தாரியா, ஜெய் சிங் அக்ரவால் ஆகியோருக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
* ராஜஸ்தானின் ஜோட்வாரா தொகுதியில் களமிறங்கிய பா.ஜ., சார்பில் களமிறங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து காங்., கட்சியில் அபிசேக் சவுத்ரி 9 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
*ராஜஸ்தான் மாநில பா.ஜ., தலைவர் சதீஷ் பூனியா ஆம்பர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
*அம்மாநில பா.ஜ., முக்கிய தலைவராக கருதப்படும் அஜித் சிங் மேத்தாவும் டாங்க் தொகுதியில் பின்னடைவை கண்டுள்ளார். இங்கு காங்., சார்பில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் களமிறங்கி உள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் முன்னாள் பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சய் குமார், காங்., சார்பில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் பின்னடைவை சந்தித்து உள்ளனர்.

