பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கிரிமினல் பிரிவுகளின் கீழ் டிசம்பர் 6 ஆம் தேதி புது தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் vivo-இந்தியாவும் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளது என்று ஆதாரங்கள் தெரிவித்தன.
இந்த விசாரணையில் லாவா இன்டர்நேஷனல் மொபைல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹரி ஓம் ராய் உள்பட 4 பேரை மத்திய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. கைது செய்யப்பட்ட மற்றவர்கள் சீன நாட்டவர்களான குவாங்வென் அல்லது ஆண்ட்ரூ குவாங், பட்டய கணக்காளர்கள் நிதின் கார்க் மற்றும் ராஜன் மாலிக் ஆவர்.
இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு பாதகமான தவறான லாபங்களை ஈட்டியதர்காக புது தில்லியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தின் முன் ED அதன் ரிமாண்ட் ஆவணங்களில் VIVO-க்கு தெரிவித்தது.
சீன நாட்டவர்கள் மற்றும் பல இந்திய நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய பண மோசடி நடந்துள்ளதாக கூறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் vivo-India மற்றும் அதனுடன் தொடர்புடைய சீன நபர்கள் மீது சோதனை நடத்தியது.
இந்தியாவில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக 62,476 கோடி ரூபாய் “சட்டவிரோதமாக” விவோ-இந்தியாவால் சீனாவிற்கு மாற்றப்பட்டதாக ED குற்றம் சாட்டியது.
லாவா இன்டர்நேஷனல் மொபைல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹரி ஓம் ராய் கூறுகையில் lava-வும் vivo-வும் சேர்ந்து ஒரு கூட்டு நிறுவனம் உருவாக்க பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், 2014 முதல் சீன நிறுவனத்துடனோ அல்லது அதன் பிரதிநிதிகளுடனோ தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று புதுதில்லியில் உள்ள நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விவோ-இந்தியாவின் தொடர்புடைய நிறுவனமான கிராண்ட் ப்ராஸ்பெக்ட் இன்டர்நேஷனல் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் மீது கடந்த ஆண்டு டிசம்பரில் டெல்லி போலீஸ் எஃப்ஐஆர்-க்கு பிறகு, பிப்ரவரி 3 அன்று அமலாக்கதுறை வழக்கு தகவல் அறிக்கையை (ஈசிஐஆர்) தாக்கல் செய்தது.
2014 டிசம்பரில் நிறுவனத்தை தொடங்கும் போது ஜிபிஐசிபிஎல் மற்றும் அதன் பங்குதாரர்கள் “போலி” அடையாள ஆவணங்கள் மற்றும் “தவறான” முகவரிகளைப் பயன்படுத்தியதாக கார்ப்பரேட் விவகார அமைச்சகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

