மும்பையில் புழுதிப் புயல் தாக்கியதால் விளம்பர பதாகை விழுந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பன்ட்நகர் பகுதியில் வீசிய புழுதிப்புயலால் ,பெட்ரோல் பங்க் மீது வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை சரிந்து விழுந்தது.
அண்மையில் தலைநகர் டெல்லியில் இரவு நேரத்தில் புழுதிப்புயல் வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில் மும்பையிலும் திங்கட்கிழமை பிற்பகலில் திடீர் கருமேகங்கள் சூழ்ந்து பகலை இரவாக்கின. அந்த நேரத்தில் பலத்த மழையுடன் வீசிய சூறைக்காற்றில் ராட்சத விளம்பர பதாகை பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையும் படிக்க:
தென்மாநிலங்களில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பாஜக வெற்றி பெறும் – பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி
இதேபோல் வதாலா பகுதியில் இரும்பு சாரங்கள் சரிந்து கார்கள் மீது விழுந்தன. இதில் இரண்டு கார்கள் சேதமடைந்தன.
மும்பையில் ஏற்பட்ட புழுதிப்புயல் காரணமாக மும்பை ரயில் மற்றும் விமான சேவையும் 20 நிமிடங்கள் பாதிக்கப்பட்டன. இதனிடையே, மும்பையில் பலத்த காற்றில் ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
.
