Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழக அமைச்சரவையில் 4 பட்டியலின அமைச்சர்கள் – ஸ்டாலின் நகர்வுக்குப் பின்னால்?! | 4 Dalit Ministers in Tamil Nadu Cabinet – Behind Stalin’s move..?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2024
in அரசியல் செய்திகள்
0
தமிழக அமைச்சரவையில் 4 பட்டியலின அமைச்சர்கள் – ஸ்டாலின் நகர்வுக்குப் பின்னால்?! | 4 Dalit Ministers in Tamil Nadu Cabinet – Behind Stalin’s move..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளது என்ற பேச்சு எழத் தொடங்கியதுமே, அதற்குப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான வி.சி.க-விலிருந்தே தலித் ஒருவர் முதல்வராகும் சூழல் தமிழ்நாட்டில் இல்லை எனப் பேசியது தொடங்கி, துணை முதல்வர் பதவியைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றதோடு, வி.சி.க தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில், “‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு” என்று பேசிய வீடியோவும் பதிவிடப்பட்டு, பேசுபொருளானது.

மேலும், வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும் போது 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திருமாவளவன் ஆக கூடாதா” எனப் பேசினார். இந்த பரபரப்புக்கு மத்தியில்தான் தமிழ்நாடு அமைச்சரவையில் முதல் முறையாக நான்கு தலித் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

திருமாவளவன், ஸ்டாலின்திருமாவளவன், ஸ்டாலின்

திருமாவளவன், ஸ்டாலின்

இது குறித்து, வி.சி.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனைச் செல்வன், ”சமூக நீதி பயணத்தில் இது ஒரு மைல் கல். தமிழக வரலாற்றில் பட்டியல் சமூகத்தவர் நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பெறுவது இதுவே முதல் முறை” எனப் பேசியிருக்கிறார்.

தலித்துகளுக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமூகநீதி பேசும் தி.மு.க ஆட்சியிலும் இதே நிலைதான் நீடிக்கிறது என்ற விமர்சனமும் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்ததாலேயே தலித் பிரதிநிதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததோடு அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவருக்கு உயர்கல்வித்துறை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஒதுக்கியதோடு அதை வி.சி.க-வினரை வைத்தே புகழ்ந்து பேசவும் வைத்துவிட்டார் என்கிறார்கள்.

மேலும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான அவரை உயர்கல்வித்துறையில் பொறுப்பாக்கியிருப்பதன் மூலமாக, மேடைகளில் ஆளுநருக்குக் கடிவாளம் போட முடியும். இனி இஷ்டத்திற்கு வாய்க்கு வந்ததையெல்லாம் ஆளுநரும் பா.ஜ.க-வினரும் பேச முடியாது.

கோவி செழியன்கோவி செழியன்

கோவி செழியன்

அதுமட்டுமல்ல, தொடர்ந்து தலித்துகளுக்கு எதிரான கட்சி என தி.மு.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கட்டமைக்க முற்பட்ட வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவுமே இப்படிக் கூடுதல் பிரதிநித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

காரைக்கால் கல்லூரி மாணவா்கள் போராட்டத்தை தொடர முடிவு

Next Post

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In