Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தலைமை தகவல் அதிகாரியாக ’ஷகில் அக்தர்’ ; 4 ஆணையர்களும் பதவியேற்றனர் – யார் இவர்கள்?! | Retired IPS Shakeel aktar appointed as chief commissioner of Information.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 17, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
தலைமை தகவல் அதிகாரியாக ’ஷகில் அக்தர்’ ; 4 ஆணையர்களும் பதவியேற்றனர் - யார் இவர்கள்?! | Retired IPS Shakeel aktar appointed as chief commissioner of Information.
41
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் தலைமை தகவல் அதிகாரி ராஜகோபால் பதவிக்காலம் முடிந்தது. அதன்பிறகு அந்தப் பொறுப்புக்கு புதிய அதிகாரியை நியமிக்க தேடுதல் குழுவும் நியமிக்கப்பட்டது. அப்போது தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரிக்கும்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு அந்தப் பொறுப்புக்கு வருவார் என சொல்லப்பட்டது. அதனால் கடந்த 6 மாதங்களாகப் புதிய அதிகாரி நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாகப் புது தகவலாக தலைமைச் செயலாளர் பதவிக்காலம் நீடிக்க அரசு முடிவு செய்திருப்பதாக சொல்லப்பட்டது. இதனால், மற்றொரு தலைமை தகவல் அதிகாரி நியமிக்கப்படுவார் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் உடல்நலத்தைக் காரணம் காட்டி அதை இறையன்பு மறுத்ததாகவும் தகவல் வந்தது. இதனால் மீண்டும் அவருக்கு தலைமை தகவல் அதிகாரி பொறுப்பு வழங்கப்படும் என மீண்டும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைமைச் செயலாளர் இறையன்பு

தலைமைச் செயலாளர் இறையன்பு

இந்த நிலையில், இந்தப் பதவிகளுக்கு 500-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் புதிய ஆணையராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஷகில் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஷகில் அக்தர் மாநில தலைமை தகவல் ஆணையராகப் பதவியேற்றுள்ளார். அவருடன் தாமரைக் கண்ணன், பிரியகுமார், செல்வராஜ், திருமலைமுத்து ஆகியோர் மாநில தகவல் ஆணையர்களாக ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

யார் இந்த ஷகில் அக்தர்?

பிகாரைச் சேர்ந்த இவர், 1989-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தவர். கடந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், தலைமை தகவல் ஆணையாளர் பதவிக்கு அவர் விண்ணப்பம் செய்திருந்தார். அவரின் தேர்வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இத்துடன் காலியாகவுள்ள நான்கு தகவல் ஆணையாளர்கள் பதவியிடங்களுக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி பி.தாமரைக்கண்ணன், ஆர்.பிரியகுமார், கே.திருமலைமுத்து, பேராசிரியர் எம்.செல்வராஜ் ஆகியோர் தகவல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஷகில் அக்தர்

ஷகில் அக்தர்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், 1987-ம் ஆண்டு ஐ.பி.எஸ்., பணியில் இணைந்தார். சட்டம்-ஒழுங்கு, சென்னை காவல் துறை போக்குவரத்து, நுண்ணறிவு கூடுதல் காவல் ஆணையர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார்.

.

Tags: aktarappointedchiefcommissionerInformationIPSRetiredShakeelஅகதரஅதகரயகஆணயரகளமஇவரகளதகவலதலமபதவயறறனரயரஷகல
Previous Post

Actor Vijay: ’அம்பேத்கரை படியுங்கள்!’ நடிகர் விஜயின் பேச்சுக்கு விசிக வரவேற்பு!

Next Post

மோடியின் “மாஸ்டர் பிளான்.!” சத்தமின்றி இறங்கி அடிக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளுக்கு மெகா சிக்கல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோடியின் “மாஸ்டர் பிளான்.!” சத்தமின்றி இறங்கி அடிக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளுக்கு மெகா சிக்கல்

மோடியின் "மாஸ்டர் பிளான்.!" சத்தமின்றி இறங்கி அடிக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளுக்கு மெகா சிக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In