Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“3 கோடி ஊடுருவல்காரர்கள் யார்?” – பாஜகவுக்கு 5 கேள்விகளை முன் வைத்த ப.சிதம்பரம் எம்.பி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 3, 2026
in அரசியல் செய்திகள்
0
“3 கோடி ஊடுருவல்காரர்கள் யார்?” – பாஜகவுக்கு 5 கேள்விகளை முன் வைத்த ப.சிதம்பரம் எம்.பி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 02, 2026 8:55 PM IST

வாக்காளர் பட்டியலில் இருந்து 3 கோடி ஊடுருவல்காரர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நவினுக்கு காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

News18
News18

எஸ்.ஐ.ஆர். மூலம் 3 கோடி ஊடுருவல்காரர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினும் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி. ப. சிதம்பரம், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினுக்கு இது தொடர்பாக ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின், “காங்கிரஸ் கட்சிக்கு இந்த நாட்டின் 140 கோடி மக்கள் மீது நம்பிக்கை இல்லை. அப்படியானால், நீங்கள் யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்? ஊடுருவிய 3 கோடி பேர் மீதா? ராகுல் காந்தி, உங்கள் நோக்கம் தான் என்ன? ஏன் ஜனநாயகத்திற்கு சவால் விடுகிறீர்கள்? ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே முதன்மையானது. மக்கள் வாக்களிக்கும் போதெல்லாம் நீங்கள் தோல்வியையே சந்தித்துள்ளீர்கள்.

இமாச்சலப் பிரதேசத்திலோ அல்லது கர்நாடகாவிலோ உங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்போது, ​​’ஜனநாயகம் வெற்றி பெற்றுவிட்டது’ என்று கூறுகிறீர்கள். ஆனால், ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார் அல்லது வங்காளத்தில் நீங்கள் தோல்வியடையும் போது, ​​திடீரென்று ‘ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது’ என்று கூறுகிறீர்கள். இது என்ன மாதிரியான இரட்டை வேடம்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சிதம்பரம், “பாஜக தலைவரிடம் வைக்கப்படும் சில கேள்விகள் இதோ:

  1. நேற்று நீங்கள் குறிப்பிட்ட அந்த 3 கோடி ஊடுருவல்காரர்கள் யார்? மத்திய அரசும் மாநில அரசுகளும் அவர்களைக் கண்டறிந்துவிட்டனவா?
  2. ஊடுருவல்காரர்கள் யார் என்பது ஹரியானா மக்களுக்குத் தெரியும் என்று கூறியிருந்தீர்கள். மக்களுக்குத் தெரிந்தால், ஹரியானா அரசுக்கும் அது தெரிந்திருக்கத்தானே வேண்டும்? மாநில அரசு ஏன் அவர்களின் பெயர்களை வெளியிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?
  3. ஊடுருவல்காரர்களை யாரும் பாதுகாக்கவில்லை; எனவே, அவர்களைக் கண்டறிந்து சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.
  4. ஒருவேளை 3 கோடி ஊடுருவல்காரர்கள் இருந்தால், பிறகு ஏன் 13 கோடியே 30 லட்சம் (13,30,00,000) பெயர்களை (இறந்தவர்கள் நீங்கலாக) நீக்கினீர்கள்?
  5. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில், மேற்கு வங்கத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்ற அந்த நபர்களின் (91-93%) நிலை என்ன? அவர்களும் ஊடுருவல்காரர்களா?

Here are some questions submitted to the BJP President:


1. Who are the 3 crore infiltrators you spoke about yesterday? Has the central government and the state governments identified them?

2. You said the people of Haryana know who the infiltrators are. If the people know, the government of Haryana must also know. Why doesn’t the state government publish their names and take action against them?

3. No one is protecting the infiltrators; please identify the infiltrators and take action against them according to law

4. If there are 3 crore infiltrators, why did you delete 13,30,00,000 names (except the dead)?

5. What about the persons (91-93%), among the deleted, who won their Appeals in West Bengal? Are they infiltrators too?

@Nitin Nabin, President, BJP

— P. Chidambaram (@PChidambaram_IN) November 2, 2026

நிதின் நபின்” என ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.



.

Previous Post

Vijay: 'அடிக்கல் நாட்டு விழா முதல் திறப்பு விழா வரை' – முதல்வர் விஜய் புதுக்கோட்டை விசிட்! | Photos

Next Post

ஓட்டுநர், நடத்துநர் கைகளைப் பிடித்து ரிப்பன் வெட்டிய முதல்வர் விஜய்; புதுக்கோட்டையில் சுவாரஸ்யம்! | CM Vijay Cuts Ribbon Holding Bus Driver, Conductor’s Hands at Pudukkottai Bus Stand

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓட்டுநர், நடத்துநர் கைகளைப் பிடித்து ரிப்பன் வெட்டிய முதல்வர் விஜய்; புதுக்கோட்டையில் சுவாரஸ்யம்! | CM Vijay Cuts Ribbon Holding Bus Driver, Conductor’s Hands at Pudukkottai Bus Stand

ஓட்டுநர், நடத்துநர் கைகளைப் பிடித்து ரிப்பன் வெட்டிய முதல்வர் விஜய்; புதுக்கோட்டையில் சுவாரஸ்யம்! | CM Vijay Cuts Ribbon Holding Bus Driver, Conductor’s Hands at Pudukkottai Bus Stand

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In