Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“3 கோடி ஊடுருவல்காரர்கள் கிடையாது; வெறும் 1,600 பேர்தான்” – மாணிக்கம் தாகூர் எம்.பி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 3, 2026
in அரசியல் செய்திகள்
0
“3 கோடி ஊடுருவல்காரர்கள் கிடையாது; வெறும் 1,600 பேர்தான்” – மாணிக்கம் தாகூர் எம்.பி | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தப் பேரணியைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “SIR-ஐ எதிர்ப்பதன் மூலம், நாட்டின் வாக்காளர் பட்டியலில் உள்ள வங்கதேச ஊடுருவல்காரர்களைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி விரும்புகிறது” என பேசியிருந்தார். மேலும், அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ஆகியோர் தொடர்ந்து, எஸ்.ஐ.ஆர். மூலம் 3 கோடி ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளோம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பதில்களில், கர்நாடகா, ஜார்க்கண்ட், மேகாலயா, கேரளா, கோவா, மிசோரம் என ஆய்வு செய்யப்பட்ட மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருப்பது வெறும் 1,600 பேர் மட்டுமே ‘சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர்’ என்பதுதான்” எனவும் பாஜகவின் பொய் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில், “வாக்காளர் பட்டியலில் ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ நீக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிவரும் பொய்ப் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது. ஏறத்தாழ 10 கோடி வாக்காளர்கள் தீவிரத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அளித்த உத்தியோகபூர்வ தரவுகளின்படி கண்டறியப்பட்ட சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினரின் எண்ணிக்கை வெறும் 1,600 மட்டுமே!

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகாரப்பூர்வ உண்மையை அப்பட்டமாக மறைத்துவிட்டு, 3 கோடி பேர் ஊடுருவல்காரர்கள் என்று அமித் ஷா கட்டவிழ்த்துவிட்டுள்ள அபாண்டமான அவதூறு இந்திய ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அமித் ஷா குறிப்பிடும் இந்த ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ எப்போதிருந்து இந்தியாவில் வசிக்கிறார்கள், எந்தத் தேர்தல்களிலிருந்து வாக்களித்து வருகிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் நாட்டுக்கு விளக்கத் தயாரா?

ஒருவேளை இவர்கள் SIR நடைமுறைக்கு முன்பிருந்த தேர்தல்களில் வாக்களித்திருந்தால், கடந்த 2014, 2019 மற்றும் 2024 ஆகிய பொதுத்தேர்தல்களின் முடிவுகளும், அந்தத் தேர்தல்கள் மூலம் அமைந்த மோடி தலைமையிலான ஒன்றிய அரசுகளும் சட்டபூர்வமானவைதானா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். 2014 முதல் மத்தியில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது; 2019 முதல் நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் உள்துறை அமைச்சராக அமித் ஷாவும், ஆளும் ஒன்றிய பாஜக அரசும்தான் முழுமுதற் பொறுப்பேற்க வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துகொண்டு நாட்டின் எல்லைகளையும் தேர்தல் கட்டமைப்புகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்களா?

வாக்காளர் பட்டியலில் ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ நீக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah கூறிவரும் பொய்ப் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது.

ஏறத்தாழ 10 கோடி வாக்காளர்கள் தீவிரத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அளித்த உத்தியோகபூர்வ தரவுகளின்படி கண்டறியப்பட்ட சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினரின் எண்ணிக்கை வெறும் 1,600 மட்டுமே!

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகாரப்பூர்வ உண்மையை அப்பட்டமாக மறைத்துவிட்டு, 3 கோடி பேர் ஊடுருவல்காரர்கள் என்று அமித் ஷா அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள அபாண்டமான அவதூறு இந்திய ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.


அமித் ஷா குறிப்பிடும் இந்த ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ எப்போதிருந்து இந்தியாவில் வசிக்கிறார்கள், எந்தத் தேர்தல்களிலிருந்து வாக்களித்து வருகிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் நாட்டுக்கு விளக்கத் தயாரா? ஒருவேளை இவர்கள் SIR நடைமுறைக்கு முன்பிருந்த தேர்தல்களில் வாக்களித்திருந்தால், கடந்த 2014, 2019 மற்றும் 2024 ஆகிய பொதுத்தேர்தல்களின் முடிவுகளும், அந்தத் தேர்தல்கள் மூலம் அமைந்த மோடி தலைமையிலான ஒன்றிய அரசுகளும் சட்டபூர்வமானவைதானா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். 2014 முதல் மத்தியில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது; 2019 முதல் நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் உள்துறை அமைச்சராக அமித் ஷாவும், ஆளும் ஒன்றிய பாஜக அரசும்தான் முழுமுதற் பொறுப்பேற்க வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துகொண்டு நாட்டின் எல்லைகளையும் தேர்தல் கட்டமைப்புகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்களா?

இந்த 3 கோடி ஊடுருவல் என்பது உங்களது இமாலய நிர்வாகத் தோல்வியா அல்லது வரவிருக்கும் தேர்தல் தோல்வி பயத்தில் புனையப்படும் அப்பட்டமான பொய்க் கதையா?

உண்மையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பதில்களில், கர்நாடகா, ஜார்க்கண்ட், மேகாலயா, கேரளா, கோவா, மிசோரம் என ஆய்வு செய்யப்பட்ட மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருப்பது வெறும் 1,600 பேர் மட்டுமே ‘சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர்’ என்பதுதான்.

நவம்பர் 1 அன்று நடைபெற்ற INDIA கூட்டணிப் பேரணியில் திரண்ட லட்சக்கணக்கான மக்களின் பெருங்கடலைக் கண்டு பாஜக தலைமை நிலைகுலைந்து போயிருக்கிறது. மக்களின் இந்த மாபெரும் சமூகநீதி மற்றும் ஜனநாயக எழுச்சிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறிப்போய், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இத்தகைய நச்சுப் பொய்களை அமித் ஷா அள்ளி வீசி வருகிறார். வெறும் வாய்ச்சவடால் பேசி மடைமாற்றப் பார்க்காமல், எதிர்க்கட்சிகளும் மக்களும் எழுப்பும் இந்த நியாயமான கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் சொல்ல வேண்டும்.

#TNCongress

— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) November 3, 2026

இந்த 3 கோடி ஊடுருவல் என்பது உங்களது இமாலய நிர்வாகத் தோல்வியா அல்லது வரவிருக்கும் தேர்தல் தோல்வி பயத்தில் புனையப்படும் அப்பட்டமான பொய்க் கதையா? உண்மையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பதில்களில், கர்நாடகா, ஜார்க்கண்ட், மேகாலயா, கேரளா, கோவா, மிசோரம் என ஆய்வு செய்யப்பட்ட மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருப்பது வெறும் 1,600 பேர் மட்டுமே ‘சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர்’ என்பதுதான்.

நவம்பர் 1 அன்று நடைபெற்ற INDIA கூட்டணிப் பேரணியில் திரண்ட லட்சக்கணக்கான மக்களின் பெருங்கடலைக் கண்டு பாஜக தலைமை நிலைகுலைந்து போயிருக்கிறது. மக்களின் இந்த மாபெரும் சமூகநீதி மற்றும் ஜனநாயக எழுச்சிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறிப்போய், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இத்தகைய நச்சுப் பொய்களை அமித் ஷா அள்ளி வீசி வருகிறார். வெறும் வாய்ச்சவடால் பேசி மடைமாற்றப் பார்க்காமல், எதிர்க்கட்சிகளும் மக்களும் எழுப்பும் இந்த நியாயமான கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

ரஷ்யாவில் 10 நாட்கள் தடுப்பு முகாமில் சிக்கித் தவித்த மாணவி – பத்திரமாக மீட்க உதவிய எம்.பி சு.வெ! | `எல்லோரும் கைவிரித்த நிலையிலும், மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து விட்டோம்!’ – நெகிழும் சு.வெ

Next Post

`ஓரிடத்தை எல்லா நேரமும் ஆக்கிரமிக்க முடியாது; மக்கள் வாழ்வாதாரமும் முக்கியம்..!’ – உச்ச நீதிமன்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேர்தல் ஆணையர் விவகாரம்: “விரிவாக விசாரிக்க உள்ளோம்” – உச்ச நீதிமன்ற நீதிபதி | Election Commissioner issue: “We intend to examine it in detail” – Supreme Court Judge

`ஓரிடத்தை எல்லா நேரமும் ஆக்கிரமிக்க முடியாது; மக்கள் வாழ்வாதாரமும் முக்கியம்..!’ - உச்ச நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In