Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஜிஎஸ்டி குறைப்பு நாட்டு மக்களுக்கு 2வது பரிசு..” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2025
in அரசியல் செய்திகள்
0
“ஜிஎஸ்டி குறைப்பு நாட்டு மக்களுக்கு 2வது பரிசு..” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விற்பனை மற்றும் சேவை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு பரிசு காத்திருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார்.

அதன்படி தற்போது 5 மற்றும் 18 என இரு சதவீதங்களின் கீழ் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட இந்த ஜிஎஸ்டி நாளை (22ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “இதற்கு முன்னதாக இருந்த குழப்பமான வரி விதிப்புகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் செலுத்தி வந்த பல்வேறு வரிகளை ஜிஎஸ்டி சீர்திருத்தம் மாற்றியுள்ளது.

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், அதிக முதலீடுகளுக்கு வழி வகுக்கும். வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 2வது பரிசு கிடைத்துள்ளது. நாளை முதல் 5 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே அமலில் இருக்கும். ஜிஎஸ்டி, வருமான வரி குறைப்பு மூலம் 2.5 லட்சம் கோடி பணப்புழக்கம் ஏற்படும்.

‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் சுதேசி பிரச்சாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் இணைய வேண்டும் என்றும், தங்கள் மாநிலங்களில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் முதலீட்டிற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாடும் மாநிலங்களும் இணைந்து செயல்படும்போது, ​​’ஆத்மநிர்பர் பாரத்’ கனவு நிறைவேறும்.

இன்று, தெரிந்தோ தெரியாமலோ, பல வெளிநாட்டுப் பொருட்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. நம் நாட்டு இளைஞர்களின் கடின உழைப்பை முதலீடாக செலுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் வாங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டையும் சுதேசியின் அடையாளமாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு கடையையும் சுதேசியால் அலங்கரிக்க வேண்டும்.

வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, நாம் தன்னம்பிக்கை பாதையில் நடக்க வேண்டும். மேலும் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் மிகப் பெரிய பொறுப்பு நமது சிறு, குறு நிறுவனங்கள் மீதும் உள்ளது. GST விகிதங்களைக் குறைப்பதும், விதிகள் மற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதும் நமது MSME-கள், சிறு தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்களுக்கு பெரிதும் பயனளிக்கும். அவற்றின் விற்பனை அதிகரிக்கும்.

மேலும் அவை குறைந்த வரி செலுத்த வேண்டியிருக்கும். அதாவது அவை இரட்டை நன்மையைப் பெறும். நாட்டின் சுதந்திரம் சுதேசி மந்திரத்தால் வலிமை பெற்றது போல, நாட்டின் செழிப்பும் சுதேசி மந்திரத்தால் மட்டுமே வலிமை பெறும்” எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 21, 2025 6:01 PM IST



.

Previous Post

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

Next Post

பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In