உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 2 கிலோ எடையுள்ள தலைமுடியை, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்களால் அகற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சுபாஷ்நகர் கர்கைனா பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளாக கடும் வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார். அப்பெண்ணின் குடும்பத்தினர் பல தனியார் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தபிறகும், நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக, அப்பெண்ணின் குடும்பத்தினர், மாவட்ட மருவத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது, வயிற்றுக்குள் மனித முடி இருந்தது தெரிய வந்தது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அப்பெண் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அறுவை சிகிச்சையின் மூலம் அவரது வயிற்றில் இருந்து கிட்டத்தட்ட 2 கிலோ எடையுள்ள தலைமுடி மருத்துவர்களால் அகற்றப்பட்டது.
