Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

211 மருந்துகள் தரமற்றவை, 5 மருந்துகள் போலியானவை.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 25, 2025
in அரசியல் செய்திகள்
0
211 மருந்துகள் தரமற்றவை, 5 மருந்துகள் போலியானவை.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 25, 2025 2:01 PM IST

நாட்டில் 211 மருந்துகள் தரமற்று இருப்பது அறியப்பட்டுள்ளது. மேலும் 5 மருந்துகள் போலியானதாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

News18
News18

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்தப்பட்ட சோதனையொன்றின் முடிவில், நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வந்த 211 மருந்துகள் தரமற்றவை என தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 211 மருந்துகளில் கால்சியம், வைட்டமின் டி3 மாத்திரை, வயிற்றுப்புழுக்களுக்கான மாத்திரைகள், பாக்டீரியா தொற்றுக்களுக்கு எதிரான ஆண்டிபயாடிக் மருந்துகள், பாரசிட்டமால் போன்றவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கடந்த மாதம் (அக். 2025) அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் (CDSCO) மூலமாக ஆய்வு செய்யப்பட்டது. அதன் முடிவில்தான், 211 மருந்துகள் தரமற்று இருப்பது அறியப்பட்டுள்ளது. மேலும் 5 மருந்துகள் போலியானதாக இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில், பல்வேறு மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 349 மருந்துகள் தரமானவை அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளன. CDSCO தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 143 மருந்துகள் தரமானவை அல்ல என்று அடையாளம் காணப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 94 மருந்துகளும், செப்டம்பரில் 112 மருந்துகளும் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

இந்த விவரங்கள் யாவும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியத்தின், https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் தரமற்றதாக கண்டறியப்பட்ட நிறுவனங்களிடம், அம்மருந்துகளை விற்பனைக்கு அனுப்பியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்ட கோல்ட்ரிப் மருந்தை உட்கொண்டதால் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள தரம்தொடர்பான இந்த முடிவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 25, 2025 2:01 PM IST



.

Previous Post

Trump: மீண்டும் கைக்கோர்க்கும் அமெரிக்கா, சீனா; ட்ரம்ப், ஜி ஜின்பிங் தொலைப்பேசியில் பேசியது என்ன?|Trump–Xi Call Signals Possible Thaw in US-China Relations

Next Post

234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது! சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த் -premalatha vijayakanth press meet .

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது! சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த் -premalatha vijayakanth press meet .

234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது! சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த் -premalatha vijayakanth press meet .

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In