“ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. 2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும்” என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜக-வின் பூத் கமிட்டி மாநில மாநாடு வருகின்ற 21 ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
1947 முதல் தற்போது வரை உயர்த்திய வரியைக் குறைத்தாக சரித்திரம் இல்லை, ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய நிதியமைச்சர் மட்டும் முடிவெடுக்க மாட்டார், எல்லா மாநில நிதியமைச்சர்களும் முடிவெடுப்பார்கள்.
ஜிஎஸ்டி வரிக்கு மத்திய அரசுதான் காரணம் எனத் தமிழக மக்களிடம் மாயயை உருவாக்கி வைத்திருந்தனர். 18 சதவிகிதமாக இருந்த வரி தற்போது 5 சதவிதமாக மாற்றப்பட்டுள்ளதால் 90 சதவிகிதம் தொழில்துறையினர் பயன் பெறுவார்கள்.
