Khelo India Games 2023 ஐ தமிழ்நாட்டில் நடத்துவதற்கான எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக , மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றிகள் இந்த விளையாட்டுகள் அனைத்து இந்திய மாநிலங்களில் இருந்தும் இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்த ஒரு தளமாக செயல்படும். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது அனைவரும் கண்டது போல், தமிழ்நாடு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தகுந்த கம்பீரத்துடன் நடத்தி, தமிழ் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தும். என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது Twitter பக்கத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

