Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“2009 இல் நான் மத்திய அமைச்சராவது தடுக்கப்பட்டது” – என்ன சொல்கிறார் திருமாவளவன்? | “becoming a Union Minister in 2009 was blocked” – What does Thirumavalavan say?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2026
in அரசியல் செய்திகள்
0
“2009 இல் நான் மத்திய அமைச்சராவது தடுக்கப்பட்டது” – என்ன சொல்கிறார் திருமாவளவன்? | “becoming a Union Minister in 2009 was blocked” – What does Thirumavalavan say?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஈழத்தமிழர் பிரச்னை சர்வதேச பிரச்னை. திமுக, அதிமுக, காங்கிரஸால் அதில் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி சமூக நீதிக்காக திமுக கூட்டணியிலேயே தொடர்ந்தேன். அதனால் ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை இழந்தேன். 2016 இல் நாங்கள் 180-200 இடங்களில் தனியாக நிற்கப் போகிறோம், நீங்கள் வேறு பாதையில் செல்லலாம் என மு.க.ஸ்டாலின் கூறிய போதுதான் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினேன்.

அப்போதே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு எனப் பேசினேன். மீண்டும் திமுகவோடு கூட்டணிக்குப் போனோம். தொடர் வெற்றிகள் கிடைத்தன. 2026 இல் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் இட்ட கட்டளை வேறாக இருந்தது. யாருமே எதிர்பார்க்காத முடிவை விஜய் எடுத்தார். பாஜகவின் வெறுப்பரசியலுக்கு எதிராக ‘ஜோசப் விஜய்’ என அறிவித்துக் கொண்டு விஜய் இறங்கினார்.

பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் ஆதரவை நாடாமல் காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். அதுவே அவரின் மதச்சார்பற்றத் தன்மையை நிரூபித்தது.

முன்பு நடந்தவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன். ஆதவ் அர்ஜுனா பாஜக அல்லாத மாற்று அணிக்காக என்னிடம் எவ்வளவோ பேசினார். ஆனால், பதவிக்காக ஒரு கூட்டணியை உடைக்கமாட்டேன் எனக் கூறினேன். எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகத்தை முதலில் அப்போதைய முதல்வர் ஸ்டாலினும் பின்னர் ராகுல் காந்தியும் வெளியிட்டு நான் பெறுவதாக இருந்தது.

பின்னர் அது நடக்காமல் போனது. அதன்பின் விஜய் வெளியிட்டு நான் புத்தகத்தைப் பெறும் ஏற்பாடோடு ஆதவ்வும் ஜான் ஆரோக்கியசாமியும் என்னை வந்து சந்தித்தார்கள். அப்போதும் அந்த மேடையில் நான் இருந்தால் எங்களின் அணிச்சேர்க்கை பாதிக்கப்படுமென மறுத்தேன்.



.

Previous Post

வெற்றிப் பயணம் இன்று தொடக்கம்: மகளிருக்கு இலவச பேருந்து பயணம் – எந்தெந்த பேருந்துகளில் செல்லலாம்? | Tamil Nadu Free Bus Travel Scheme For Women 2026: Vetri Payanam Launch Details And Eligibility

Next Post

காந்தி ஜெயந்தி: இன்று சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம் – பயணிகள் கவனத்திற்கு! | Chennai Metro Train Timings Today: Gandhi Jayanti Schedule And Travel Updates 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காந்தி ஜெயந்தி: இன்று சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம் – பயணிகள் கவனத்திற்கு! | Chennai Metro Train Timings Today: Gandhi Jayanti Schedule And Travel Updates 2026

காந்தி ஜெயந்தி: இன்று சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம் - பயணிகள் கவனத்திற்கு! | Chennai Metro Train Timings Today: Gandhi Jayanti Schedule And Travel Updates 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In