Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

20,000 பேர் பலி..கடலுக்குள் இருந்து மேன்மேலும் சடலங்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள்
1
20,000 பேர் பலி..கடலுக்குள் இருந்து மேன்மேலும் சடலங்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன..
53
SHARES
85
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

லிபியா : லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என டேர்னா நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் இருந்து மேன்மேலும் சடலங்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டேர்னா நகரில் டேனியல் புயல் தாக்கியபோது 2 அணைகளும் 4 பாலங்களும் இடிந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கிவிட்டன.

எகிப்து உட்பட சில அண்டை நாடுகளில் இருந்து சில உதவிகள் வரத் தொடங்கியுள்ளன, ஆனால் லிபியாவின் அரசியல் சூழ்நிலையால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. நாட்டில் இரண்டு போட்டி அரசாங்கங்கங்கள் ஆட்சி செய்து வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், இத்தாலி, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உதவிகளை அனுப்புவதாகக் கூறியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இரவில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகளில் நகரத்தின் வழியாக வெள்ளத்தின் நதி ஓடுவதைக் பார்க்க முடிகிறது. வெள்ளத்தில் ஏராளமான கார்கள் மிதந்து சென்றன.

ஏராளமான மக்கள் கடலுக்குள் அடித்துச் சென்ற கொடூரமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. மற்றவர்கள் வீட்டின் மேல் தளங்களிலும் மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

“நான் பார்த்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், இது ஒரு சுனாமி போன்றது” என்று லிபியாவின் கிழக்குப் பகுதி அரசைச் சேர்ந்த ஹிஷாம் சிகியோவாட் கூறினார்.

டேர்னாவின் தெற்கே உள்ள அணைகளில் ஒன்று உடைந்ததால் விழுந்ததால் நகரின் பெரும் பகுதிகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

“ஒரு பெரிய ஊர் அழிந்துவிட்டது – ஒவ்வொரு மணி நேரமும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது”

‘எஞ்சியிருப்பது இடிபாடுகளும் உடல்களும் மட்டுமே’

டேர்னாவின் பெரும்பகுதியில் எஞ்சியிருப்பது இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளும் வெள்ளத்தில் இறந்தவர்களின் உடல்களும் மட்டுமே என்று கிழக்கு நகரத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் தெரிவித்தார்.

அணைகள் இடிந்து விழும் சத்தம் விமானத் தாக்குதல் அல்லது கடும் துப்பாக்கிச் சூடு போன்று கேட்டதாக தாஹா முஃப்தா கூறினார்.

“இப்போது தண்ணீர் நின்றுவிட்டது. மேலும் எஞ்சியிருப்பது இடிபாடுகள் மட்டுமே. தண்ணீருக்கு அடியில் இருப்பது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட மக்கள் மட்டுமே.” என்றார் அவர்.

டேர்னாவின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் அதிர்ஷ்டசாலி என்று அவர் தன்னைக் கூறுகிறார். இந்தப் பகுதி ஒரு மலையின் மீது உள்ளது. அதனால் மோசமான வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது.

“மீட்புப் பணியாளர்கள் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள், தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். ஆனால் பேரழிவின் அளவைச் சமாளிக்கத் தேவையான உபகரணங்களும் அனுபவமும் அவர்களிடம் இல்லை.” என்கிறார் அவர்.

2011 ஆம் ஆண்டு முதல் அணைகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர், ஆனால் “யாரும் அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

ஏன் இவ்வளவு பெரிய சேதம்?

கிழக்கு லிபிய நகரமான டேர்னாவில் இந்த வெள்ளம் மிகவும் பேரழிவை ஏற்படுத்திய காரணிகளை நாம் கவனித்து வருகிறோம்.

குடும்பங்கள் தூங்கும் போது சுனாமி போன்ற ஒரு பெரிய வெள்ளம் கடலை நோக்கி மக்களை அடித்துச் சென்றிருக்கிறது.

லிபியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரை முழுவதும் வீசிய புயல் காரணமாக கனமழை பெய்தது. இது சாதாரண மழை அல்லை. செப்டம்பர் மாதம் முழுவதும் நாடு பொதுவாகப் பெறும் 1.5 மிமீ மழையுடன் ஒப்பிடுகையில், 24 மணி நேரத்திற்குள் சில பகுதிகளில் 400 மிமீ வரை மழை பெய்திருக்கிறது.

இந்த அசாதாரண வெள்ளம், நகரின் வழியாக ஓடும் டேர்னா ஆற்றின் இரண்டு முக்கிய அணைகளை உடைத்தது. பல முக்கிய பாலங்களையும் சிதறடித்தது.

நகரம் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்பு ஒரு பெரிய வெடி சத்தம் கேட்டதாகவும், வெள்ளம் கிட்டத்தட்ட 10 அடி உயரத்துக்கு வந்ததாகவும் தப்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous Post

காவிரி பிரச்சினை | மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.,க்கள் மனு அளிப்பார்கள் – முதல்வர் ஸ்டாலின்

Next Post

குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமல் இருக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமல் இருக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது

குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமல் இருக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    மிகவும் வருத்தமான செய்தி இந்த இயற்கை பேரிடருக்கு முழுக்க காரணம் காடுகளை அழிப்பதே. எனவே மரங்களை வளர்ப்போம் இயற்கை வளங்களை பாதுகாப்போம் இது போன்ற இயற்கை பேரிடர்களிவ் இருந்து நம்மை நாம் காப்போம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In