Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

20 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. 18 கொலை வழக்கு.. பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் கைதி! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2025
in அரசியல் செய்திகள்
0
20 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. 18 கொலை வழக்கு.. பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் கைதி! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 10, 2025 10:34 AM IST

பரப்பன அக்ரஹார சிறையில் உமேஷ் ரெட்டி உள்ளிட்ட கைதிகள் செல்போன், டிவி உள்ளிட்ட சொகுசு வசதிகளுடன் இருப்பது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Rapid Read
பரப்பன அக்ரஹார சிறை
பரப்பன அக்ரஹார சிறை

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் செல்போன், டிவி என சகல வசதிகளுடன் கைதிகள் கும்மாளம் போட்ட சம்பவம் கர்நாடகாவில் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இருபது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்… 18 பேர் கொலை வழக்கில் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற ரவுடிக்கு, சிறையில் ராஜ மரியாதை அளிக்கப்பட்ட காட்சி தான் இது.. சிறைச் சாலையில் சொகுசு விடுதி போன்று உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது… பரப்பன அக்ரஹார சிறை, கைதிகளின் சொர்க்க பூமியமாக மாறியுள்ளதா? நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது பரப்பன அக்ரஹார மத்திய சிறை. இந்த சிறையில் கொலை வழக்கு முதல் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த குற்றவாளிகள் வரை பலருக்கும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அம்பலப்படுத்தும் வகையில் உமேஷ் ரெட்டி என்ற ரவுடி, சிறையில் சகல வசதியுடன் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர், 20 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 18 கொலை வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையாக குறைத்தது. தற்போது, உமேஷ் ரெட்டி பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், சிறையில் இரு ஸ்மார்ட் போன்களுடன் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அத்துடன், அவரின் அறையில் டிவி உட்பட சொகுசு விடுதி போன்று ஆடம்பரமாக வசதிகளுடன் இருக்கும் காட்சி கர்நாடகாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தருண் ராஜு என்பவரும் கைது செய்யப்பட்டு, இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரும், சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியவாறு சமைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வழக்கில் கைதான குற்றவாளியும் சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியுள்ளார். ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட நடிகர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலருக்கும் சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.

இது தொடர்பாக சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் குற்றவாளிகள் சிறைக்குள் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதியளித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Bangalore,Karnataka

First Published :

November 10, 2025 10:34 AM IST



.

Previous Post

SIR:“முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாக” – முதல்வர் ஸ்டாலினின் சந்தேகங்கள்! | SIR: “The first Konal is a completely Konal story” – Chief Minister Stalin’s doubts!

Next Post

Ironman 70.3:“இந்த சவால் எனது சகிப்புத்தன்மையை சோதித்தது.” – அண்ணாமலை பகிர்வு | Ironman 70.3: “This challenge tested my endurance.” – Annamalai Sharing

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Ironman 70.3:“இந்த சவால் எனது சகிப்புத்தன்மையை சோதித்தது.” – அண்ணாமலை பகிர்வு | Ironman 70.3: “This challenge tested my endurance.” – Annamalai Sharing

Ironman 70.3:``இந்த சவால் எனது சகிப்புத்தன்மையை சோதித்தது." - அண்ணாமலை பகிர்வு | Ironman 70.3: ``This challenge tested my endurance.'' - Annamalai Sharing

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In