Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்.. கோவிட் தடுப்பூசி காரணமா? முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2025
in அரசியல் செய்திகள்
0
ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்.. கோவிட் தடுப்பூசி காரணமா? முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 02, 2025 11:41 AM IST

கர்நாடகாவில் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர். முதல்வர் சித்தராமையா கொரோனா தடுப்பூசி சந்தேகத்தை கூறினார். மத்திய அரசு தடுப்பூசிக்கு தொடர்பில்லை என விளக்கம்…மேலும் படிக்கவும்

கொரோனா தடுப்பூசி குறித்து சித்தராமையா கருத்து

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில், இணை நோய் எதுவுமின்றி இளம் வயதினோர் ஏராளமானோர் இருந்தது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, திடீர் மாரடைப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை புறக்கணிக்க முடியாது என்று கூறினார். திடீர் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணங்களை கண்டறிய மருத்துவர் கே.எஸ். ரவீந்திரநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டு, 19 மாநிலங்களில், 18 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டோர் திடீரென்று உயிரிழந்தவர்கள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய நோய் தடுப்பு அமைப்பு இணைந்து, ஆய்வு மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில், திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவானதாக கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, இந்திய மருத்துவ கவுன்சிலுடன் இணைந்து டெல்லி எய்ம்ஸ் மேற்கொண்ட ஆய்வில், இளம் வயதில் ஏற்படும் திடீர் உயிரிழப்புகளுக்கு மாரடைப்பு காரணம் என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதற்கு மரபணு மாற்றங்களே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்ட நிலையில், ஆய்வின் இறுதி முடிவு வெளியானதும் பொதுவெளியில் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, இவ்விரு ஆய்வுகளின் அடிப்படையிலும் இளம் வயதில் ஏற்படும் திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளுக்கும் தொடர்பு இல்லை என்பது புரிய வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. பல்வேறு விஞ்ஞானிகளும் அறிவியல் பூர்வமாக இக்கருத்தையே ஆமோதிப்பதாக மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. அதே சமயம், மரபுணு, வாழ்வியல் மாற்றங்கள், உடனடியாக வெளியே தெரியாத உடல்நலம் சார்ந்த பிரச்னைகளால் திடீர் இறப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, திடீர் மரணங்களுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி கொரோனா தடுப்பூசி மீது குற்றம் சுமத்துவது, நாட்டின் சுகாதாரத்துறை மீதான நம்பகத்தன்மையை கெடுக்கும் செயல் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 02, 2025 11:41 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்.. கோவிட் தடுப்பூசி காரணமா? முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கம்



.

Previous Post

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்! மனுக்களைப் பெற்றார் முதல்வர்!!

Next Post

கூலி டிரைலர் எப்போது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கூலி டிரைலர் எப்போது?

கூலி டிரைலர் எப்போது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In