Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 20, 2024
in Default
0
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
48
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வரும் 2024 – 25ம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மாணவர்களின் கல்வித்திறனையும் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கூடுதல் மன அழுத்தத்தையும் சந்திக்கின்றனர். இந்நிலையில், மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் 10 மற்றும் 12 வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு, 2 பொதுத் தேர்வுகள் நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வு முறை வரும் 2024-25 கல்வியாண்டில் நடைமுறைக்குக் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் (கோப்பு படம்)

மாணவர்கள் (கோப்பு படம்)

இதன் மூலம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவர். முதல் தேர்வை சிறப்பாக எழுதியதாக ஒரு மாணவர் நினைத்தால், அவருக்கு இரண்டாவது தேர்வு கட்டாயம் கிடையாது. மேலும், மாணவர்கள் இரண்டு தேர்வுகளை எழுத வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் பொதுத்தேர்வு 2024ல் நவம்பர் – டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பொதுத் தேர்வு 2025ம் ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் (கோப்பு படம்)

மாணவர்கள் (கோப்பு படம்)

இவ்விரண்டு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எதில் கிடைக்கிறதோ, அதை இறுதித் தேர்வாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேர்வு முறை குறித்துக் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

யூடியூப் சேனலை பயன்படுத்தி தயாரிப்புகளை சந்தைப்படுத்த மூன்று நாள் பயிற்சி : தமிழக அரசு அறிவிப்பு..

Next Post

ஸ்ரீராம நவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு இனி அரசு விடுமுறை..?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஸ்ரீராம நவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு இனி அரசு விடுமுறை..?

ஸ்ரீராம நவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு இனி அரசு விடுமுறை..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In