இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு எனப்படும் RAW ஏஜென்சியின் புதிய தலைவராக தொழில்நுட்ப செயல்பாடுகளில் எக்ஸ்பெர்ட் (Expert) என அழைக்கப்படும் ரவி சின்ஹா என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். RAW ஏஜென்சியின் தற்போதைய தலைவர் சமந்த் கோயலின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியோடு முடிவடையும் நிலையில், ரவி சின்ஹா புதிய தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
சமந்த் கோயலின் பதவிக்காலம் முடிவுக்குப் பிறகு பதவியேற்கும் ரவி சின்ஹா, அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு RAW ஏஜென்சியின் தலைவர் பதவியில் இருப்பார். சீக்கிய தீவிரவாதம், மணிப்பூர் கலவரம் என முக்கிய பிரச்னைகளுக்கு மத்தியில் ரவி சின்ஹா பதவியேற்பதால், அவர் யார் என்பது எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது.

