சென்னை- தேனாம்பேட்டை காமதேனு மண்டபத்தில் நடைபெற்ற காவலர்கள் குடும்பங்களின் நான்காவது சங்கமம் பெருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் 1988-ம் ஆண்டு கோவையில் பயிற்சி பெற்று சென்னை பெருநகர் காவலர்களின் குடும்பத்தோடு நான்காவது சங்கமம் பெருவிழாவிற்கு எஸ்ஐ பிரபாகரன் தலைமை ஏற்றார். எஸ்ஐ மோகன்தாஸ் வரவேற்றார்.
இந்த விழாவிற்கு காவலர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்கள். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகவும், குடும்பத்தில் ஒருவராகவும், டிஎஸ்பி மதிவாணன் மற்றும் கண்ணன் கலந்து கொண்டார்கள்.
மேலும் எஸ் ஐ அருணாச்சலம், ரவிக்குமார், ஜான் பிரிட்டோநாதன், சக்கரவர்த்தி என நூற்றுக்கு மேற்பட்டவர் காவலர்கள் கலந்து கொண்டார்கள். ஓய்வு பெற்ற எஸ்.ஐ-களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கலந்துகொண்ட அனைவரும் அருசுவை உணவு வழங்கப்பட்டன, அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டன, இறுதியாக எஸ் ஐ மணிமாறன் நன்றி கூறினார்.
நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் தங்களின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டார்கள்





இந்நிகழ்ச்சியில் மக்கள் ஆணையம் சார்பாக தலைமை போட்டோகிராபர் செந்தில் குமார் மற்றும் சென்னை செய்தியாளர் முரளி கலந்து கொண்டனர்
அருமை வாழ்த்துக்கள்