Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

1,666 புதிய அரசு பேருந்துகளுக்கு ரூ.371 கோடியில் அடிச்சட்டங்கள் கொள்முதல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 14, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
1,666 புதிய அரசு பேருந்துகளுக்கு ரூ.371 கோடியில் அடிச்சட்டங்கள் கொள்முதல்
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வரின் உத்தரவின்படி, ரூ.371.16 கோடி மதிப்பில் 1,666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு குறிப்பாக விழுப்புரம் – 344, சேலம் – 84, கோயம்புத்தூர் – 263, கும்பகோணம் – 367, மதுரை – 350, திருநெல்வேலி – 242 என மொத்தமாக நகரம் மற்றும் புறநகர் பேருந்து சேவைகளுக்காக 1,650 அடிச்சட்டம் கொள்முதல் செய்யவும், மலைவாழ் மக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் கோயம்புத்தூருக்கு பிரத்யேகமாக 16 அடிச்சட்டங்களும் என 1,666 அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, “இது முற்றிலும் தமிழக அரசு நிதியின் கீழ் வாங்கப்படும் பேருந்துகளாகும். கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்போது டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகளைத் தயாரித்து வழங்க தேர்வான நிறுவனத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2 மாதத்துக்குள் முதல்கட்டமாக தயாரிக்கப்பட்ட பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். பொங்கல் பண்டிகைக்குள் பெரும்பாலான பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும். அடுத்தகட்டமாக 552 பேருந்துகள் கொள்முதலுக்கான டெண்டர் இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் புதிய பேருந்துகள் வலம் வரும்” என்றனர்.

.

Tags: அடசசடடஙகளஅரசகடயலகளமதலபதயபரநதகளககர.371
Previous Post

ஆவடி அருகே பட்டப்பகலில் ரவுடி கொலை

Next Post

சென்னை அம்பத்தூர் கிடங்கில் 2,000 கிலோ குட்கா பறிமுதல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை அம்பத்தூர் கிடங்கில் 2,000 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை அம்பத்தூர் கிடங்கில் 2,000 கிலோ குட்கா பறிமுதல்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    புதிய பேருந்துகளுக்கு அடிச்சட்டம் வாங்க உத்தரவு போட்டிருப்பது நல்ல செயல் அதேபோன்று இந்த அடி சட்டங்களுக்கு பஸ் பாடி கட்டும் போது ஜன்னல்களை நன்றாக பெரிய அளவில் வைத்து காற்றோட்டமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது வரும் பஸ்களில் காற்றோட்டமே இல்லாமல் குமட்டல் வருகிறது முக்கியமாக வெளியூர் செல்லும் விரைவு பேருந்துகளிலேயே இந்த நிலைமை உள்ளது எனவே நன்கு காற்றோட்டமாக இருக்கும்படி பேருந்துகளை பார்த்துக் கொள்ள வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In