Last Updated:
கர்நாடகாவில் திருமணம் ஆகாத ஆண்கள், பெண் கிடைக்க வேண்டி 160 கிமீ தொலைவில் உள்ள மாதேஸ்வரம் மலை கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபாடு செய்தனர்.
கர்நாடகாவில் திருமணம் ஆகாத ஆண்கள், பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரயாக சென்று வினோத வழிபாடு நடத்தினர்.
மணமகனின் சம்பளம் குறித்த எதிர்பார்ப்பு பெண் வீட்டார் மத்தியில் அதிகரித்துள்ளதாக இளைஞர்கள் கூறினார். இதனால், நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள், திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், கர்நாடகாவின் கோடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத இளைஞர்கள், பெண் கிடைக்க வேண்டி 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாதேஸ்வரம் மலை கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபாடு நடத்தியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அக்கிராம பெண்களும் பாதயாத்திரையாக சென்று கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இளைஞர்களுக்கு பெண் கிடைக்க வேண்டுமென வேண்டுதல் நடத்தியதாக அக்கிராம பெண்கள் கூறினர். விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு பெண் கொடுக்க சிலர் தயக்கம் காட்டுவதாகவும், அக்கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
March 20, 2025 10:04 PM IST

