
நாடு முழுவதும் திருவிழா கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் பல மாநிலங்களில் தொடர்ந்து பண்டிகைகளும், விடுமுறை தினங்களுமாக அடுத்தடுத்து வருவதால், உங்கள் வங்கி சம்பந்தமான பண பரிவர்த்தனைகளை முன்கூட்டியே சரியாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். மாதத்தின் இரண்டு சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிறு விடுமுறைகள் உட்பட 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வங்கிகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையும், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும்.
இந்த நாட்கள் தவிர்த்து, அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளையொட்டி விடுமுறை விடுவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யும். பிராந்திய விடுமுறை நாட்களிலும் மாநிலங்களில் செயல்படும் வங்கிகள் இயங்காது. இதனால் மாநிலத்துக்கு மாநிலம் வங்கிகளுக்கான விடுமுறை தினங்களின் எண்ணிக்கை வேறுபடும்.
செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி, விநாயக சதுர்த்தி, ஈத்-இ-மிலாத் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. அதன்படி செப்டம்பர் மாத வங்கி விடுமுறைகள் நாட்கள் வெளியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 3, 2023- ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 6, 2023- ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி
செப்டம்பர் 7, 2023- ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு அகமதாபாத், சண்டிகர், டேராடூன், காங்டாக், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை.
செப்டம்பர் 9, 2023- 2 வது சனிக்கிழமை
செப்டம்பர் 10, 2023- ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 17, 2023- ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 18, 2023- விநாயகர் சதுர்த்தி பெங்களூரு, தெலங்கானாவில் விடுமுறை
செப்டம்பர் 19, 2023- விநாயகர் சதுர்த்தி அகமதாபாத், பேலாப்பூர், புவனேஷ்வர், மும்பை, நாக்பூர், பனாஜியில் வங்கிகள் விடுமுறை.
செப்டம்பர் 20, 2023- விநாயகர் சதுர்த்தி கொச்சி மற்றும் புவனேஸ்வரில் விடுமுறை
செப்டம்பர் 22, 2023- ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் கொச்சி, பனாஜி, திருவனந்தபுரத்தில் விடுமுறை
செப்டம்பர் 23, 2023 – 4 வது சனிக்கிழமை

செப்டம்பர் 28, 2023- ஈத்-இ-மிலாத் காரணமாக அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, டேராடூன், தெலுங்கானா, இம்பால், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சியில் வங்கி விடுமுறை
செப்டம்பர் 29, 2023- ஈத்-இ-மிலாத்-உன்-நபி காங்டாக், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் விடுமுறை
இந்த விடுமுறை நாட்களை கணக்கிட்டு நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் அல்லது யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என வங்கிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. பல்வேறு நடைமுறை சிக்கல்கள் வரும் என்பதால் அதனை திட்டமிட்டுக் கொள்வது நல்லது தானே…

