Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

15,000 பேருக்கு வேலை.. சென்னையில் காத்திருக்கும் மிகப்பெரிய குட்நியூஸ்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 23, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
15,000 பேருக்கு வேலை.. சென்னையில் காத்திருக்கும் மிகப்பெரிய குட்நியூஸ்..!
96
SHARES
155
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: வேலை வேண்டும், அதுவும் நல்ல வேலை வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். குறிப்பாக சென்னையில் பலருக்கும் படிப்பிற்கு ஏற்ற வேலை தேடுவது அதிகமாக உள்ளது. அவர்களுக்காக சென்னை கொட்டிவாக்கத்தில் நவம்பர் 25-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற போகிறது.

சென்னையை பொறுத்தவரை பல்வேறு துறைகளில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறமையான பணியாளர்களை தேடி அலைகின்றன. இதேபோல் சென்னையில் பல இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். அவர்களை பொறுத்தவரை நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு, வேலையில் குறைவான ரிஸ்க் ஆகியவை இலக்காக உள்ளது.

Job ready for 15000 people in Chennai: Important announcement issued by District Collector

இப்படியான சூழலில் பலரும் சென்னையில் எங்கு வேலை காலியாக உள்ளது. நமக்கு பிடித்த வேலையா, சம்பளம் எவ்வளவு என்று நிறையவே யோசிக்கிறார்கள். நிறுவனங்களுமே தங்களுக்கு ஏற்ற பணியாளர்களை தேடி அலைகின்றன. இருதரப்பையும் இணைக்கும் வகையில் சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பர் 25ம் தேதி அதாவது நாளை மறுநாள் நடைபெற போகிறது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் சென்னை மாவட்டத்தின் 4-ஆவது மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் கொட்டிவாக்கம் நெல்லை நாடாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (நவ.25) காலை 8 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 15,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்யவுள்ளன. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி வரை, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, தொழிற்கல்வி, பொறியியல் பட்டம் பெற்றவா்கள், கணினி இயக்குபவா்கள், தையல்கற்றவா்கள் என அனைத்து தகுதியுள்ள நபா்களும் கலந்து கொள்ளலாம்.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் நபா்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

15000 பேருக்கு வேலை.. சென்னையில் காத்திருக்கும் மிகப்பெரிய குட்நியூஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு

கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது இணையதள முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம்” இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

Previous Post

பர்ஸ்ட் ஆக்சன் யார் மீது? நானா கூட இருப்பேன்? ஆளுநரால் பதற்றத்தில் எடப்பாடி.. 

Next Post

ரூ.350 பணத்துக்காக நடனமாடியபடி இளைஞரை 55 முறை கத்தியால் குத்திய சிறுவன்..!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரூ.350 பணத்துக்காக நடனமாடியபடி இளைஞரை 55 முறை கத்தியால் குத்திய சிறுவன்..!!

ரூ.350 பணத்துக்காக நடனமாடியபடி இளைஞரை 55 முறை கத்தியால் குத்திய சிறுவன்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In