கர்நாடகாவில் உள்ள 223 எம்எல்ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு 14,359 கோடி ரூபாயாக உள்ளது. இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் MLA க்களின் சொத்துக்களில் மிக அதிகமானதாகும்.
கர்நாடகாவை அடுத்து மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு அதன் 284 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ₹6,679 கோடியாகவும், ஆந்திரபிரதேச 174 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ₹4,914 கோடியாகவும் உள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மாநில சட்டசபைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ.க்களின் சுயமாகப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் (ADR) மற்றும் நேஷனல் எலெக்ஷன் வாட்ச் (NEW) ஆகஸ்ட் 1 அன்று இதை வெளிப்படுத்தியது.
எம்.எல்.ஏ.க்கள் கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் இருந்து இந்தத் தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன. 28 சட்டமன்றங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 4,033 எம்எல்ஏக்களில் மொத்தம் 4,001 எம்எல்ஏக்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிக்கை 84 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 4,001 எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளடக்கியது.
கர்நாடகாவைச் சேர்ந்த 223 எம்எல்ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு, ₹14,359 கோடி இது மிசோரம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் தனிநபர் ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம். இது இந்தியாவில் உள்ள 4,001 எம்எல்ஏக்களின் மொத்த சொத்துக்களில் 26 சதவிகதமாகும்.
இது ராஜஸ்தான், பஞ்சாப், அருணாச்சல பிரதேசம், பீகார், டெல்லி, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம், கோவா, மேகாலயா, ஒடிசா, அசாம், நாகாலாந்து, உத்தரகாண்ட், கேரளா, புதுச்சேரி, ஜார்கண்ட், சிக்கிம், மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்களை விட அதிகம். இந்த 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சிட்டிங் எம்எல்ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு ₹13,976 கோடியாகும்.


அந்தந்த மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் அமுலாக்க துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பது தெரியவில்லை இப்பொழுது விபரங்கள் தெரிந்த பிறகு என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியவில்ல இந்த துறையினர் நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது