Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மியான்மருக்கு 15 டன் நிவாரணப் பொருள்கள்.. இந்திய விமானப்படை விமானம் மூலம் அனுப்பிவைப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 30, 2025
in அரசியல் செய்திகள்
0
மியான்மருக்கு 15 டன் நிவாரணப் பொருள்கள்.. இந்திய விமானப்படை விமானம் மூலம் அனுப்பிவைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 29, 2025 1:36 PM IST

மியான்மரில் 7.2 ரிக்டர் நிலநடுக்கத்தில் 1,002 பேர் பலி. இந்தியா 15 டன் நிவாரணப் பொருள்களை “ஆப்ரேஷன் பிரம்மா” மூலம் அனுப்பியது.

News18News18
News18

மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான நில அதிர்வு, மியான்மரின் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில், மதியம் 12:50 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது. மொத்தம் இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதல் நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 ஆகவும், இரண்டாவது அதிர்வு ரிக்டர் அளவில் 6.4 ஆகவும் பதிவாகியது.

இதில், மியான்மரில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இடிபாடுகளில் சிக்கி 2,376 பேர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் 10 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 68 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தியா சார்பில், அனுப்பி வைக்கப்பட்ட 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் மியான்மருக்கு சென்றடைந்தன. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, “ஆப்ரேஷன் பிரம்மா” என்ற திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது.

இதையும் படியுங்கள் : 16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. ”ஆயுதங்களும் வன்முறையும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது” – அமித்ஷா

அதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி.130 ஜே என்ற விமானத்தில், தார்பாய், மெத்தை, போர்வை, நீர் சுத்திகரிப்பான், சோலார் விளக்குகள், மருந்து, மாத்திரைகள், கையுறைகள் உட்பட 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை, மியான்மரில் உள்ள யாங்கூன் நகருக்கு சென்றடைந்ததாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

First Published :

March 29, 2025 1:36 PM IST



.

Previous Post

admk: செங்கோட்டையன் டெல்லி பயணம்; மத்திய பாதுகாப்பு வழங்க மத்திய அரசு திட்டமா?

Next Post

'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' – அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' – அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா

'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' - அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In