தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 15 நாட்கள் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு
உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நிறைவடைந்தது. சென்னை நந்தம்பாக்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டின் மூலம் ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும், நேரடி மற்றும் மறைமுமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாகவும், இந்த மாநாடு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளைஞரணி மாநாடு ஆய்வு
இந்நிலையில், வரும் ஜனவரி 21ம் தேதி சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. பொங்கள் பண்டிகை நிறைவடைந்ததும், மாநாட்டிற்கான ஆயத்தபணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 28-ம் தேதி, 15 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் ஸ்பெயின் பயணம் செய்யும் அவர், அடுத்ததாக ஆஸ்திரேலியா அதன் பிறகு, அமெரிக்கா செல்கிறார் என கூறப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் மூலம் முதல்வர் பல்வேறு முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.

