சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எதிர்க்கட்சித் தலைவர் ப்ரீதம் சிங், பதவியேற்பின் போது நாடாளுமன்றக் குழுவில் சத்தியப்பிராமணம் செய்யும் பொய் கூறியது ஆதரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு 14,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப்ரீதம் சிங், இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாகவும் கூறினார்.
சிங்கப்பூர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது 10,000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்டும். அவ்வாறு விதிக்கப்பட்டால், அவர் பதவியை இழக்க நேரிடும். மேலும், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
ப்ரீதம் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனை அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யும் வரம்பை எட்டவில்லை என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க… பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ.நா. மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் அறிவுறுத்தல்!
