Last Updated:
கொல்கத்தா ரித்துராஜ் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய கொல்கத்தா பகுதியில் ஃபல்பட்டி மச்சா என்ற பகுதியில் இயங்கி வந்த தனியார் நட்சத்திர விடுதியான ரித்துராஜில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் தியா, ரிதன் ஆகிய 2 குழந்தைகள் உள்பட 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும் தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஓட்டலின் ஜன்னல்கள் வழியாகவும், கட்டடத்தின் கூரையில் இருந்தும் பலர் வெளியே குதித்து காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Kolkata,West Bengal
April 30, 2025 10:47 AM IST

