Last Updated:
சோனியா காந்தி, மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதம் குறித்து மத்திய அரசை விமர்சித்து, உடனடியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக 4 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமாகி வருவதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார். நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது, 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தான் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுவதாக தெரிவித்தார். 2013ம் ஆண்டு யுபிஏ அரசால் கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் 140 கோடி மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றியதாக சோனியா காந்தி தெரிவித்தார்.
குறிப்பாக கொரோனா காலத்தில் இந்த சட்டம் பெரும் பயனுள்ளதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 81 கோடியே 35 லட்சம் பேர் இதனால் பயனடைவதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார். சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக 4 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமாகி உள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தெளிவான முடிவு எடுக்கப்படாமல் உள்ளது என்றும் கூறினார். இதனால், 14 கோடி தகுதியான பயனாளிகள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்களை பெற முடியாத நிலையில் உள்ளதால். மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைந்த எடுக்க சோனியா காந்தி வலியுறுத்தினார்.
February 11, 2025 9:03 AM IST

