Last Updated:
இமாச்சலப்பிரதேசம் முழுவதும் தொடர் மழை பெய்து வருவதால், வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இமாச்சலில் டாடா சுமோ வாகனத்தின் மீது பாறை உருண்டு விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சம்பா மாவட்டத்தில் கில்லார் – உதய்பூர் சாலையில் அமைந்துள்ள பங்கி பள்ளத்தாக்கு பகுதியில் டாடா சுமோ வாகனம் ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறைகளில் ஒன்று, இவர்கள் பயணம் செய்த வாகனம் மீது விழுந்தது. இதில் வாகனம் முழுவதும் அப்பளம்போல் நொறுங்கிய நிலையில் உள்ளே இருந்த 13 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் காயம் அடைந்தனர்.
A large part of a mountain fell on a moving Tata Sumo in Chamba, Himachal… Out of 15 people aboard the Sumo, 13 died… The video of the accident is heartbreaking… Watch pic.twitter.com/eJVyBCbZTL
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) July 24, 2026
தகவல் அறிந்து விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர், வாகனத்தில் சிக்கி இருந்த உடல்களை மீட்டனர். பாதையை சீரமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினர்.
இமாச்சலப்பிரதேசம் முழுவதும் தொடர் மழை பெய்து வருவதால், வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், நிலச்சரிவு அபாயம் மிகுந்த கில்லார் – உதய்பூர் சாலையில் பாறை உருண்டு 13 பேர் உயிரிழந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

