Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“முதல் முறையாக வாக்களிக்கப் போகும் 124 வயது மிந்தா தேவி” – இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 14, 2025
in அரசியல் செய்திகள்
0
“முதல் முறையாக வாக்களிக்கப் போகும் 124 வயது மிந்தா தேவி” – இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:August 12, 2025 5:09 PM IST

124 வயதுப் பெண் மிந்தா தேவி முதல் முறையாக வாக்களிக்க உள்ளார் தேர்தல் ஆணையம் மீது என குற்றச்சாட்டை முன்வைத்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

பிரியங்கா காந்தி பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வாக்குத் திருட்டு எனும் குற்றச்சாட்டை முன்வைத்து, நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணி செல்ல முயன்று, அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில், முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் 124 வயதுப் பெண்ணின் புகைப்படம், பெயர் பொறித்த டி-ஷர்ட்டை அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பலரும், ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் ‘மிந்தா தேவி’ எனும் பெயர் பொறித்த டி-ஷர்ட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். மேலும், அவர்களின் டி-ஷர்ட்டின் பின் பக்கத்தில் ‘124 நாட் அவுட்’ எனும் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கும் பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளது. இதில், சுமார் 65 லட்சம் நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், குடிபெயர்ந்தவர்கள், இரு இடங்களில் வாக்கு வைத்திருந்தவர்கள், மரணித்தவர்கள் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

நீக்கத்திற்குப் பின் தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில், மிந்தா தேவி எனும் பெண்ணுக்கு 124 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கையில் எடுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவரது பெயர், வயது பொறித்த டி-ஷர்ட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

போராட்டம் குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “ராஜீவ் குமார், ஞானேஷ் குமார் ஆகியோர் கீழ் இருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் துறையாக மாறிவிட்டது. இது அதன் தோல்வியைக் காட்டுகிறது. இதற்கான உதாரணம் தான், முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் 124 வயது மிந்தா தேவி” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 12, 2025 5:09 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“முதல் முறையாக வாக்களிக்கப் போகும் 124 வயது மிந்தா தேவி” – இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்



.

Previous Post

கவின் கொலை வழக்கு: தந்தை, மகனுக்கு 13 நாள் சிறை!

Next Post

மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை

மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In