நிலச்சரிவு காரணமாக சாலையில் சிக்கித் தவித்த சுமார் 1,500 சுற்றுலாப் பயணிகள் நேற்றிரவு அருகிலுள்ள கிராமங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்கள் காவல் நிலையம், குருத்வாரா, இந்தோ – திபெத்திய எல்லை காவல் முகாம் போன்ற இடங்களில் இரவைக் கழித்த நிலையில் அவர்களுக்கு அங்குள்ள கிராமவாசிகள் உணவளித்தனர்.
நேற்றி இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள், சுங்தாங்கிலிருந்து லாச்சென் செல்லும் வழியில் முன்ஷிதாங்கிற்கு அருகிலும், சுங்தாங்கிலிருந்து லாச்சுங்கிற்கு செல்லும் வழியில் லிமாவிற்கு அருகிலும் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால், பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தமிழ்நாட்டின் 10 இடங்களில் வெயில் சதம்
